2 நாடுகளில் அரசுமுறை பயணம்: பிரதமர் மன்மோகன்சிங் மெக்சிகோ புறப்பட்டு சென்றார் || prime minister manmohan singh visit mexico
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
  • 2015-16 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்திய பொருளாதாரம் ஜி.டி.பி 7.3 சதவீதமாக உயர்வு
  • காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றார் காபு சமூக தலைவர் பத்மநாபம்
2 நாடுகளில் அரசுமுறை பயணம்: பிரதமர் மன்மோகன்சிங் மெக்சிகோ புறப்பட்டு சென்றார்
2 நாடுகளில் அரசுமுறை பயணம்: பிரதமர் மன்மோகன்சிங் மெக்சிகோ புறப்பட்டு சென்றார்
புதுடெல்லி, ஜூன்.17-
 
மெக்சிகோ நாட்டில் உள்ள லாஸ் காபோஸ் நகரில் ஜி-20 என்று அழைக்கப்படுகிற வளர்ந்த, வளர்ந்து வருகிற நாடுகளின் 7-வது மாநாடு, நாளை மறுதினம் (18-ந் தேதி) தொடங்குகிறது.
 
இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடர்ந்து பிரேசில் நாட்டில் உள்ள ரியோ-டி-ஜெனீரோ நகரில் வரும் 20-ந் தேதி ரியோ பிளஸ் 20 என்னும் புவி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாடு 22-ந் தேதி முடிகிறது.
 
இந்த மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் 8 நாள் அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று அவர் டெல்லியிலிருந்து தனி விமானத்தில் லாஸ் காபோஸ் புறப்பட்டுச்சென்றார். பிரதமருடன் அவரது ஆலோசகர் டி.கே.ஏ. நாயர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை கொண்ட குழுவினரும் சென்றனர்.
 
ஜி-20 மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பங்கேற்பதற்காக மத்திய திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா, நிதித்துறை செயலாளர் ஆர்.கோபாலன் லாஸ் காபோஸ் நகருக்கு போய்ச்சேர்ந்து விட்டனர்.
 
ஜி-20 மாநாட்டில் ஐரோப்பிய மண்டலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும், சீனாவிலும், இந்தியாவிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை உலக பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பது பற்றியும் முக்கிய விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த மாநாட்டின்போது பிரதமர் மன்மோகன்சிங், ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கெலல், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோல்லண்டே, மெக்சிகோ அதிபர் பெலிப் கால்டோரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
 
ரியோ-டி-ஜெனீரோ நகரில் நடைபெறுகிற ரியோ பிளஸ் 20 என்னும் புவி மாநாட்டில், உலகளவிலான சுற்றுச்சூழல் திட்டத்துக்கு ஆதரவு திரட்டப்படுகிறது. இந்த மாநாட்டில் பேசும்போது, பிரதமர் மன்மோகன்சிங் வறுமை ஒழிப்பு, உணவு பாதுகாப்பு, நவீன எரிசக்தி சேவைகள், வேலை வாய்ப்புகள் உருவாக்குதல் போன்றவற்றுக்கான முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துவார் என தகவல்கள் கூறுகின்றன.
 
இந்த மாநாட்டின்போது பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை அதிபர் ராஜபக்சே, நேபாள பிரதமர் பாபுராவ் பட்டரய் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
 
8 நாள் வெளிநாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் வரும் 23-ந் தேதி இரவு டெல்லி திரும்புகிறார். ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு அரசியல் குழப்பங்கள், திருப்பங்களுக்கு மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பெயர் அறிவிக்கப்பட்டு, அவருக்கு ஆதரவு பெருகி வருகிற நிலையில், முழு மனநிறைவுடன் பிரதமர் மன்மோகன்சிங் தனது 8 நாள் பயணத்தை தொடங்கி இருக்கிறார் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.   
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

நடிகர் சீரஞ்சீவி திடீர் கைது

ராஜமுந்திரி விமான நிலையத்தில் நடிகர் சிரஞ்சீவியை கைது செய்த போலீசாருக்கு எதிராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif