மத்திய அமைச்சரவையிலிருந்து விலக மாட்டோம்: திரிணாமுல் காங்கிரஸ் || tirunamool congress dont withdra upa alliance
Logo
சென்னை 06-05-2015 (புதன்கிழமை)
மத்திய அமைச்சரவையிலிருந்து விலக மாட்டோம்: திரிணாமுல் காங்கிரஸ்
மத்திய அமைச்சரவையிலிருந்து விலக மாட்டோம்: திரிணாமுல் காங்கிரஸ்
கொல்கத்தா, ஜூன். 16 -
 
ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் தேர்வில் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் வேறுபட்டு நிற்கிறது.
 
காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜிதான் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அப்துல் கலாம்தான் எங்களது ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் கூட்டணிக் கட்சிகளுக்குள் உரசல் ஏற்படவே, மேற்கு வங்க மாநில அமைச்சரவையிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகும் என அக்கட்சி மிரட்டல் விடுத்திருந்தது. இதற்கு பதிலடி கொடுத்த மேற்கு வங்க ஊரகத்துறை அமைச்சர் பிரத் ஹக்கிம் மாநில அமைச்சரவையிலிருந்து காங்கிரஸ் விலகிக் கொள்ள விரும்பினால், தாராளமாக விலகிக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
 
இதனால் மத்திய அமைச்சரவையிலும் இக்கூட்டணியில் விரிசல் விழும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான குணால் கோஷ் முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
காங்கிரஸ் கூட்டணியில் அமையப் பெற்றுள்ள மத்திய அமைச்சரவையில் திரிணாமுல் காங்கிரஸ் நீடிக்கவே விரும்புகிறது. அமைச்சரவையிலிருந்து விலகும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.
 
இதனிடையே தனது முடிவில் உறுதியாக இருக்கும் மம்தா பானர்ஜி பேஸ்புக் இணையதளம் மூலம் அப்துல் கலாமிற்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சர்மா-ராய்டுவின் அதிரடியால் டெல்லி அணியை வென்றது மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல் போட்டியில் நேற்றைய 39வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் ....»

amarprakash160x600.gif