சவுதி இளவரசர் அமெரிக்காவில் மரணம் || Saudi Arabias Crown Prince Nayef dies
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • மதுரை பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு கவர்னர் ரோசையா இரங்கல்
சவுதி இளவரசர் அமெரிக்காவில் மரணம்
சவுதி இளவரசர் அமெரிக்காவில் மரணம்
சவுதி அரேபியாவின் இளவரசரான நயிப் பின் அப்துல் அஸிஸ் அல் சவுத் இன்று மரணமடைந்தார் என்று அந்நாட்டிலிருந்து செயல்படும் அல் அரேபியா செய்தி வெளியிட்டுள்ளது.
 
சவுதி அரேபியா நாட்டில் மன்னராட்சி முறை நிலவி வருகிறது. இந்நாட்டின் இளவரசரும், துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராகவும் பதிவி வகித்து வந்த நயிப் பின் அப்துல் விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காகவும், மருத்துவப் பரிசோதனைகளை செய்து கொள்வதற்காகவும் கடந்த மாத இறுதியில் அமெரிக்கா சென்றார்.
 
கடந்த ஜூன் 3 அன்று இளவரசர் உடல்நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் நாடு திரும்புவார் என்றும் சவுதி அரசு அறிவித்திருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்து விட்டதாக அத்தொலைகாட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது.
 
இவருக்கு 77 அல்லது 78 வயது இருக்கலாம். சவுதி அரசின் அடுத்த மன்னராக பதவியேற்கும் நிலையில் இருந்த நயிப் இறந்ததை அடுத்து, அவரது தம்பியும் ரியாத் மாகண கவர்னருமான சல்மான் அடுத்த இளவரசராக அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif