லியாண்டர் பூபதி சேர்ந்து விளையாட இந்திய டென்னிஸ் சம்மேளனம் திட்டவட்டம் || olympic tennis leander peas bhupathi join play
Logo
சென்னை 02-12-2015 (புதன்கிழமை)
  • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • வெள்ள பாதிப்பு குறித்து ஜெயலலிதாவிடம் கேட்டறிந்த மோடி: முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி
  • பூண்டி ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு: 18,000 கனஅடியில் இருந்து 24,000 கனஅடியாக உயர்வு
  • தமிழகக்தில் டிச.7ல் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
  • சென்னையில் நேற்று ஒரே நாளில் 256 மி.மீ., மழை பதிவு
  • விழுப்புரம், கடலூர், நாகை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
லியாண்டர்- பூபதி சேர்ந்து விளையாட இந்திய டென்னிஸ் சம்மேளனம் திட்டவட்டம்
லியாண்டர்- பூபதி சேர்ந்து விளையாட இந்திய டென்னிஸ் சம்மேளனம் திட்டவட்டம்
பெங்களூரு, ஜூன் 16-
 
ஜூலை மாதம் லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் மகேஷ் பூபதியும் லியாண்டர் பயசும் இணைந்து விளையாடுவார்கள் என்று அகில இந்திய டென்னிஸ் சங்க தேர்வுக்குழு அறிவித்தது.
 
அகில இந்திய டென்னிஸ் சம்மேளத்தின் இந்த முடிவுக்கு மகேஷ் பூபதி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். பயசுடன் இணைந்து ஆடமாட்டேன் என்றும் போபண்ணாவுடன் இணைந்து விளையாட விரும்புகிறேன் என அறிவித்து உள்ளார்.
 
இதற்கு அகில இந்திய டென்னிஸ் சம்மேளன தலைவர் அனில் கண்ணா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
 
லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர்- பூபதி ஜோடி விளையாடும் என்பதில் டென்னிஸ் சம்மேளனம் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக யாருக்கும் சலுகை காட்டவில்லை. மேலும் ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் கடினமானதாக இருக்கும். இதில் விளையாடி அனுபவம் பெற்ற இந்த ஜோடி விளையாடுவதே நல்லதென கருதப்படுகிறது. வெற்றி பெறும் அணியை அனுப்புவதையே விரும்புகிறோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 
மேலும், இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக இது குறித்து கருத்து கேட்கப்பட்ட போது இதே பதிலை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனின் அவுட் இல்லை முடிவு தவறானது - ஐ.சி.சி. ஒப்புதல்

138 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் சில ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif