விபசார பெண்ணின் வழக்கு இழுத்தடிப்பு: ஆலந்தூர் மாஜிஸ்திரேட்டுக்கு ஐகோர்ட் கண்டனம் || protitute case not finished chennai high court condemn to saidapet justice
Logo
சென்னை 03-07-2015 (வெள்ளிக்கிழமை)
  • மொபைல் நம்பர் மாறாமல் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி இன்று முதல் அமல்
  • நாகை: கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்
  • சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவு
  • ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரின் காவல் 4-வது முறையாக நீட்டிப்பு
  • ராஜஸ்தானில் பள்ளி பஸ் மீது மின்சாரம் ஓயர் அறுந்து விழுந்து விபத்து- பல மாணவர்கள் காயம்
  • முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்டும் விவகாரத்தில் கேரளா அரசுக்கு நோட்டீஸ்
  • அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு
விபசார பெண்ணின் வழக்கு இழுத்தடிப்பு: ஆலந்தூர் மாஜிஸ்திரேட்டுக்கு ஐகோர்ட் கண்டனம்
விபசார பெண்ணின் வழக்கு இழுத்தடிப்பு: ஆலந்தூர் மாஜிஸ்திரேட்டுக்கு ஐகோர்ட் கண்டனம்
சென்னை, ஜூன். 16-
 
நீலாங்கரை அருகே ஒரு பங்களாவில் 1.8.2009 அன்று விபசாரத்தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி அங்கு விபசாரத்தில் தள்ளப்பட்ட 4 பெண்களை மீட்டனர். அவர்கள் மயிலாப்பூர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
 
பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் வந்து அவர்களை மீட்டு சென்றனர். ஆனால் விசித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஆந்திரா பெண்ணை மீட்க யாரும் வரவில்லை.
 
ஆந்திராவில் இருந்த அவரது தந்தை மகளின் நிலை அறிந்து மீட்பதற்காக ஆலந்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 19.1.2010-ல் மனுதாக்கல் செய்தார். மனு விசாரணையின் போது ஒவ்வொரு முறையும் தள்ளி வைக்கப்பட்டது.
 
இந்த நிலையில் விசித்ராவின் தந்தை இறந்து விட்டார். இதனால் வழக்கு மேலும் தாமதமாகி விசித்ரா விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. அவரது நிலையை அறிந்த ஒரு தொண்டு நிறுவனம் ஐகோர்ட்டில் முறையிட்டது. நீதிபதி எஸ். நாகமுத்து முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. அவர் விசித்ராவை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு விட்டார்.
 
இதையடுத்து விசித்ராவை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவரை அழைத்து வந்த விவரத்தை கோர்ட்டில் தெரிவிக்கவில்லை. கோர்ட்டு அலுவல் நேரம் முடிந்த பின் நீதிபதி நாகமுத்துக்கு இது தெரிய வந்தது.
 
உடனே விசித்ராவை அவர் தன் முன் ஆஜர்படுத்த உத்தரவு விட்டார். ஆலந்தூர் கோர்ட்டு வாய்தா மேல் வாய்தா கொடுத்ததால் விசித்ரா 2 வருடம் 10 மாதம் வரை காப்பகத்திலேயே இருக்கவேண்டிய நிலை அறிந்து நீதிபதி கண்ணீர் விட்டார். கோர்ட்டு நேரம் முடிந்த பின்பும் 30 நிமிடம் விசாரித்தார்.
 
பின்னர் நீதிபதி கூறுகையில், இது மனித உரிமை மீறல். ஆலந்தூர் மாஜிஸ்திரேட்டு எந்திரத்தனமாக வழக்கை தள்ளி வைத்துள்ளார். இதில் போலீசார் செயல்பாடு தண்டனைக்குரியது. கால தாமதம் பற்றி அவர்கள் பதில் அளிக்கவேண்டும். இந்த வழக்கில் செவ்வாய்க் கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

முல்லைப் பெரியாரில் பாதுகாப்பு படையை நிறுத்த மறுப்பு: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை, ஜூலை. 3–ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–முல்லைப் பெரியாறு பகுதியில் ....»