வியாசர்பாடி ரவுடி கொலையில் 5 பேர் சரண் || vysarpadi rowdy murder
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
  • தொடர் கனமழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் பயணம்
  • கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: ஒபாமா கண்டனம்
வியாசர்பாடி ரவுடி கொலையில் 5 பேர் சரண்
வியாசர்பாடி ரவுடி கொலையில் 5 பேர் சரண்
பெரம்பூர், ஜூன் 16-

வியாசர்பாடி ஜெகஜீவன் ராம் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 30). இவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வாகன கடன் செலுத்தாதவர்களின் கார், மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்வது இவரது பணியாகும்.

மேலும் இவர் ரவுடி பொக்கை ரவி கும்பலை சேர்ந்தவர். ரஞ்சித் மீது 3 கொலை முயற்சி வழக்கு, ஒரு பெண் கடத்தல் வழக்கு போன்றவை உள்ளன.

கடந்த வாரம் ரவுடி ரஞ்சித்தை ஒரு கும்பல் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக வியாசர்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் ரஞ்சித் கொலை தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த பப்லு, வடிவேல், ஆரம்பாக் கத்தை சேர்ந்த டெல்லி பாபு, பிரசாந்த், வெங்கடேசன் ஆகிய 5 பேர் நேற்று மாலை திருப்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்கள் ரவுடி நாகேந்திரன் கும்பலை சேர்ந்த கூலிப்படையினர் ஆவர்.

அவர்கள் 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் பிரகாஷ் முடிவு செய்துள்ளார். அப்போது ரவுடி ரஞ்சித் கொலைக்கான காரணம் பற்றி தெரியவரும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

Maalaimalar.gif
Maalaimalar.gif