மொடக்குறிச்சி அருகே ஓடும் பஸ்சில் ஜேப்படி செய்த பெண்கள் || modakurichi bus pick pocket women
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
மொடக்குறிச்சி அருகே ஓடும் பஸ்சில் ஜேப்படி செய்த பெண்கள்
மொடக்குறிச்சி அருகே ஓடும் பஸ்சில் ஜேப்படி செய்த பெண்கள்
ஈரோடு, ஜூன். 16-


மொடக்குறிச்சி அருகே உள்ள முத்து கவுண்டன் பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 30), இவர் ஈரோட்டில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் வெளியூர்களுக்கு சென்று வசூலான பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துடன் முத்தூரில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். மொடக்குறிச்சி அருகே பஸ் வந்தபோது அந்த பஸ்சில் கைக்குழந்தைகளுடன் 2 பெண்கள் ஏறினர்.

அதில் ஒரு பெண் கதிர்வேல் அருகே உட்கார்ந்தார். அப்போது அந்த பெண் சுடுதண்ணீரை எடுத்து கதிர்வேலுவிடம் கொடுத்து அதை பால்புட்டியில் ஊற்றி கொடுக்கும்படி கேட்டார். இதனால் அவர் பால்புட்டியில் சுடுதண்ணீரை ஊற்றி கொண்டு இருந்தார்.

இந்த நேரத்தை பயன்படுத்தி அந்த பெண் கதிர்வேல் வைத்திருந்த பையில் இருந்து பணத்தை ஜேப்படி செய்தார். இதை முதலில் அவர் கவனிக்க வில்லை. சற்று நேரம் கழித்து பார்த்தபோது தான் வைத்திருந்த பணப்பை திறந்து கிடப்பதையும்,அதில் இருந்த ஒரு 500 ரூபாய் கட்டு கீழே கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் அவர் சத்தம் போட்டார். இந்த நேரத்தில் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் கைக்குழந்தைகளுடன் ஏறிய 2 பெண்களும் நைசாக கீழே இறங்கினர். அவர்கள் மீது சந்தேகப்பட்ட கதிர் வேலுவும் மற்ற பயணிகளும் அவர்களை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் ஜேப்படி செய்த ரூ.4500 இருந்தது தெரியவந்தது.

மற்ற பணம் கதிர்வேலின் பையில் இருந்தது. இதையொட்டி அவர்கள் இருவரையும் பிடித்து பயணிகள் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பெயர் லதா (23), திவ்யா (28) என்பதும் தெரிய வந்தது. இதையொட்டி அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif