சிரஞ்சீவியால் காங்கிரசுக்கு எந்த பலனும் இல்லை: 18 தொகுதிகளிலும் ஓட்டுக்கள் குறைந்தன || praja rajyam party chiranjeevi congress vote decrease
Logo
சென்னை 09-10-2015 (வெள்ளிக்கிழமை)
  • ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணியை 1-0 என புனே வீழ்த்தியது
சிரஞ்சீவியால் காங்கிரசுக்கு எந்த பலனும் இல்லை: 18 தொகுதிகளிலும் ஓட்டுக்கள் குறைந்தன
சிரஞ்சீவியால் காங்கிரசுக்கு எந்த பலனும் இல்லை: 18 தொகுதிகளிலும் ஓட்டுக்கள் குறைந்தன
நகரி, ஜூன்.16-

நடிகர் சிரஞ்சீவி 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த 2009-ம் ஆண்டு ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் அவரது கட்சி திருப்பதி உள்பட 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மொத்த ஓட்டு சதவீதத்தில் 18 சதவீத ஓட்டுக்கள் அவரது கட்சிக்கு கிடைத்தது.

இந்நிலையில் காங்கிரஸ் மேலிடம் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெகன்மோகன்ரெட்டி அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் ஒய்.எஸ்.ஆர். என்ற கட்சியைத் தொடங்கினார். ஜெகன்மோகனால் ஏற்படும் இழப்பை சரிக்கட்ட காங்கிரஸ் மேலிடம் சிரஞ்சீவி கட்சியை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டது. இதன்மூலம் தங்களுக்கு சிரஞ்சீவி கட்சியின் 18 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் என்று காங்கிரஸ் கனவு கண்டது. ஆனால் சிரஞ்சீவி காங்கிரசில் சேர்ந்ததால் அக்கட்சிக்கு எந்த பலனும் இல்லை.

உதாரணமாக 2009-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருப்பதி தொகுதியில் சிரஞ்சிவி போட்டியிட்டு 56,305 ஓட்டுக்கள் பெற்று வெற்றி அடைந்தனர். அவரிடம் தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் 40,379 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். இருகட்சிகளும் இணைந்து விட்டதால் தற்போதைய இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு 96 ஆயிரத்து 684 ஓட்டுக்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது காங்கிரசுக்கு 41 ஆயிரத்து 220 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

இதேபோல் தெலுங்கானா பகுதியில் உள்ள பரக்காலா தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 69,135 ஓட்டுகளும், சிரஞ்சீவி கட்சி 11,968 ஓட்டுகளும் பெற்றிருந்தன. ஆனால் தற்போதைய இடைத் தேர்தலில் காங்கிரசுக்கு 5,099 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்துள்ளன இதேபோல் 18 சட்சபை தொகுதிகள், நெல்லூர் எம்.பி. தொகுதியில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவான ஓட்டுக்களே கிடைத்துள்ளன.

இடைத்தேர்தலுக்கு முன்பு நடிகர் சிரஞ்சீவி அனைத்து தொகுதிகளிலும் சென்று சூறாவளி பிரசாரம் செய்தார். ஆனால் அவரது பிரசாரம் எடுபடவில்லை. தேர்தல சமயத்தில் ஜெகன் மோகன் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டதால் அவருக்கு அனுதாப அலை வீசியது. இதனால் காங்கிரஸ், தெலுங்குதேசம் போன்றவை படுதோல்வி அடைந்ததாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுத் தேர்தலுக்கு முந்தைய இந்த மினி தேர்தலில் ஜெகன்மோகன் கட்சி அபார வெற்றி பெற்று இருப்பதால் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

லாலுவை சாத்தான் என்று கூறிய விவகாரம்: மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

பீகார் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ....»

VanniarMatrimony_300x100px_2.gif