காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை: நாகர்கோவிலில் பதட்டம் 600 போலீசார் குவிப்பு || love marriage man killed kanyakumari
Logo
சென்னை 10-10-2015 (சனிக்கிழமை)
  • ஓசூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி
  • கூடங்குளம் முதல் அணுஉலையில் 15-ம் தேதி முதல் மீண்டும் உற்பத்தி தொடங்கும்
  • நாகை மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு
  • டெல்லியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம்
  • கோகுல்ராஜ் கொலை வழக்கு: போலீசில் நாளை சரண் அடைவேன் - யுவராஜ்
காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை: நாகர்கோவிலில் பதட்டம்- 600 போலீசார் குவிப்பு
காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை: நாகர்கோவிலில் பதட்டம்- 600 போலீசார் குவிப்பு
நாகர்கோவில், ஜூன்.16-

நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை செட்டித் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 24). சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். இவரது மனைவி நிஷா (20). இடலாக்குடியைச் சேர்ந்த இவரை ரமேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2 பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நிஷா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்றுமுன்தினம் காலை ரமேசை 2 பேர் சவாரிக்கு அழைத்தனர். ரமேசும் சம்மதம் தெரிவித்து லோடு ஆட்டோவுடன் சென்றார். இடலாக்குடி பகுதியில் 7 பேர் கும்பல் அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியது. இதில் ரமேஷ் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை இடலாக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.

ரமேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்களும், நண்பர்களும் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் கொலையாளிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதற்கிடையே ஆசாத்நகர், வெள்ளாடிச்சிவிளை பகுதியில் உள்ள வீடுகள் மீது சிலர் கல்வீசி தாக்கினர். காய்கறி கடை ஒன்றும் சூறையாடப்பட்டது. மேலும் இளங்கடையில் உள்ள வழிபாட்டுத்தலத்திலும் கல்வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து அந்த பகுதியினர் இளங்கடை வழிபாட்டு தலம் முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி.க்கள் பாஸ்கரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை மற்றும் கல்வீச்சு சம்பவத்தால் இளங்கடை, ஆசாத்நகர், வெள்ளாடிச்சிவிளை, பறக்கை சந்திப்பு பகுதியில் பதட்டமான சூழல் உருவானது.

தகவல் அறிந்த நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. வரதராஜூலு, எஸ்.பி.க்கள் பிரவேஷ்குமார் (குமரி), விஜயேந்திர பிதரி (நெல்லை) ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இடலாக்குடி, இளங்கடை, ஆசாத்நகர், வெள்ளாடிச்சிவிளை, சித்திரை திருமகாராஜபுரம் உள்ளிட்ட பகுதியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் 10 டி.எஸ்.பி.க்களும் அடங்குவர்.

மேலும் மணிமுத்தாறு, ராஜபாளையம், பழனி, கோவை, மதுரையைச்சேர்ந்த 5 கம்பெனி அதிரடி படை போலீசாரும், கூடங்குளம் பாதுகாப்பு பணியில் இருந்த அதிரடி படை போலீசாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பறக்கை சந்திப்பு, ஆசாத்நகர் பகுதியில் போலீசார் சோதனை சாவடி அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுகிறார்கள். மேலும் அந்த பகுதி முழுக்க வாகனத்தில் ரோந்து சுற்றி வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கலவரத்தை அடக்கும் வஜ்ரா வாகனங்களும் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

பதட்டம் நிலவுவதால் இடலாக்குடி, இளங்கடை பகுதியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடந்தன. இதற்கிடையே ரமேஷ் கொலை தொடர்பாக நிஷாவின் அண்ணன் செய்யது அலி, அவரது நண்பர்கள்கவுசி, ஆசிப் கனி உள்பட 7 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்களில் பவுசி, ஆசிப் கனி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்ற 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கொல்லப்பட்ட ரமேசின் உடல் இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - கன்னியாகுமரி

section1

குமரியில் கனமழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 2–வது நாளாக குளிக்க தடை

நாகர்கோவில், அக். 10–குமரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு கொட்டி தீர்த்த கனமழையினால் மாவட்டத்தின் ....»

VanniarMatrimony_300x100px_2.gif