ஆந்திரா இடைத்தேர்தல்: ஜெகன்மோகன் ரெட்டி அலை வீசியது ஏன்? || andhra be election jaganmohan reddy win
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
ஆந்திரா இடைத்தேர்தல்: ஜெகன்மோகன் ரெட்டி அலை வீசியது ஏன்?
ஆந்திரா இடைத்தேர்தல்: ஜெகன்மோகன் ரெட்டி அலை வீசியது ஏன்?
ஐதராபாத், ஜூன் 16-
 
ஆந்திர இடைத்தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு அலை வீசியதால் காங்கிரஸ் சுருட்டி வீசப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பின்பு காங்கிரஸ் கோட்டையாக இருந்த ஆந்திராவை என்.டி. ராமராவ் அரசியலில் குதித்து தகர்த்தார். அவர் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
 
அவருக்கு பின் சந்திரபாபு நாயுடு அசைக்க முடியாத முதல்-மந்திரியாக இருந்தார். தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்த காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியை காங்கிரஸ் முன் நிறுத்தியது. அவர் தெலுங்கானா கோரிக்கையை முன் வைத்து மீண்டும் காங்கிரசை ஆட்சி கட்டிலில் அமரவைத்தார்.
 
25 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி காரணமாக இருந்தார். 2-வது முறையாகவும் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்து முதல்- மந்திரியானார். அவரது சிறப்பான செயல்பாட்டினால் வீழ்ந்து கிடந்த காங்கிரஸ் வீறு கொண்டு எழுந்தது.
 
சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் விவசாயிகளை கவனிக்க தவறி விட்டார். நகர்ப்பகுதியில் மட்டும் கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள், தொழிற்சாலைகள், நவீன வசதிகள் செய்து கொடுத்தார். கிராமப்புறங்களையும், விவசாயிகளையும் கண்டு கொள்ள தவறிவிட்டார். கடன் தொல்லையால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
 
இதை மனதில் கொண்ட ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிராமப்புற மக்கள், விவசாயிகள் நலனில் அதிக அக்கறை காட்டினார். அவர்கள் மீது பரிவு காட்டி விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்.
 
இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் முதல்- மந்திரி ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மரணம் அடைந்தார். இது ஆந்திர மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தங்கள் நலனில் அக்கறை செலுத்தியவர் மறைந்து விட்டாரே என்ற துயரத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
 
ஒய்.எஸ். ஆருக்குப் பின் முதல்- மந்திரி யார் என்ற கேள்வி எழுந்தபோது அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி பெயர் முன் மொழியப்பட்டது. ஆனால் மூத்த தலைவர்கள் அவரை தடுத்து விட்டனர். ஜெகன்மோகன் அனுபவம் இல்லாதவர் என்று கூறியதுடன் கட்சி மேலிடத்துக்கும் தவறான தகவல் தெரிவித்து விட்டனர்.
 
தற்போது தமிழக கவர்னராக இருக்கும் ரோசய்யா ஆந்திர முதல்- மந்திரியானார். ஒய்.எஸ்.ஆர். ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முழுவதும் ஆறுதல் யாத்திரை என்ற பெயரில் சுற்றுப் பயணம் செய்து தனது தந்தை மரணத்துக்காக தீக்குளித்தவர்களது குடும் பத்தினரை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கினார்.
 
இதனால் ஜெகன்மோகன் செல்வாக்கு அதிகரித்தது. ஜெகன்மோகனின் ஆறுதல் யாத்திரைக்கு தடை விதித்தது. தடையை மீறி யாத்திரை மேற்கொண்டார். மாநில தலைவர்களின் தவறான யோசனையால் கட்சி மேலிடம் அவரை காங்கிரஸ் இருந்து நீக்கியது. இது இளைஞரான ஜெகன்மோகன் மீது மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தியது.
 
மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து நீதி கேட்டார். அவருக்கு பெருந்திரளான கூட்டம் கூடியது. ஆதரவாளர்கள் வற்புறுத்தலால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்.
 
காங்கிரஸ் கொடுத்த கடப்பா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். கடப்பா தொகுதி இடைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து நடந்த பல இடைத்தேர்தல் களில் வெற்றிகளை குவித்தார்.
 
ஜெகன்மோகன் ரெட்டி வளர்ச்சியை தடுக்க தவறியதால் ரோசய்யா நீக்கப்பட்டு கிரண்குமார் ரெட்டி முதல்- மந்திரியாக அமர்த்தப்பட்டார். ஜெகன் ஆதரவு அலையை அவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
 
கடந்த டிசம்பர் மாதம் கிரண்குமார் ரெட்டி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் அரசுக்கு எதிராக 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டளித்தனர். இதைத் தொடர்ந்து 16 பேர் எம்எ.ல்.ஏ. பதவி ரத்து செய்யப்பட்டது.
 
மேலும் நடிகர் சிரஞ்சீவி எம்.பி.யானதால் திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ.,பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான தொகுதிகள் உள்பட மொத்தம் 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இது 'மினி' பொதுத் தேர்தல் போல் கருதப்பட்டது. காலியாக இருந்த நெல்லூர் எம்.பி. தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
 
தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு அலை கடலென கூட்டம் திரண்டது. அவருக்கு ஆதரவாக அலை வீசியது. இதை தடுக்க காங்கிரஸ் திட்டமிட்டது.
 
ஜெகன்மோகனை பழி வாங்க அவர் மீது எற்கனவே சி.பி.ஐ. சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து இருந்தது. அந்த வழக்கை சி.பி.ஐ.மீண்டும் தீவிரப்ப டுத்தி கைது செய்து சிறையில் அடைத்தது. இது அனுதாப அலையாக மாறியது. ஜெகன்மோகன் சிறை சென்றதால் அவரது தாயார் விஜயலட்சுமி, சகோதரி ஷர்மிளா, மனைவி பாரதி ஆகியோர் பிரசார களத்தில் குதித்தனர்.
 
ஜெகனைவிட அவர்களுக்கு பல மடங்கு கூட்டம் கூடியது. ஆதரவு அலையும், அனுதாப அலையும் ஒன்று சேர்ந்து புயலாக மாறி இடைத்தேர்தலில் காங்கிரசை சுருட்டி வீசியது.
 
தேர்தல் நடந்த 18 தொகுதிகளில் 15 தொகுதிகளை ஜெகன்மோகன் கட்சி கைப்பற்றியது. சிரஞ்சீவி வெற்றி பெற்ற திருப்பதி தொகுதியிலும் ஜெகன் மோகன் கட்சி கைப்பற்றியது.
 
காங்கிரஸ் 13 தொகுதிகளை இழந்து 2 தொகுதியை மட்டுமே தக்க வைத்தது. மேலும் ஒரு தொகுதியை டி.ஆர். எஸ். கட்சியிடம் இழந்தது. சிரஞ்சீவி தன் வசம் இருந்த ஒரு தொகுதியையும் ஜெகன் மோகனிடம் இழந்தார்.
 
ஜெகன்மோகனின் இந்த வெற்றிக்கு ஒய்.எஸ்.ஆர். செயல்படுத்திய ஏழைகளுக்கான நலத் திட்டங்கள்தான் காரணம் என்று ஆந்திர அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஜெகன் மீதான சொத்து குவிப்பு புகார்களை மக்கள் பொருட்படுத்தவில்லை, ஒய்.எஸ்.ஆர். செயல் படுத்திய ஏழைகளுக்கான இலவச வீடுகள் திட்டம், இலவச மருத்தவ திமட்டம், தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏழைகளுக்கு அறுவை சிகிச்சை உதவி, ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, ஏழை மாண வர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி போன்ற திட்டங்களை ஒய்.எஸ்.ஆர். செயல்படுத்தினார்.
 
இந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜெகன்மோகள் வெற்றிக்கு அவரது தந்தையின் நலத்திட்டங்களே காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

காங்கிரஸ் தேர்தல் குழு அடுத்த வாரம் அறிவிப்பு

சென்னை, பிப். 9–தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif