ஒலிம்பிக்கில் பயசுடன் ஆடமறுப்பு: மகேஷ் பூபதி மீது ஒழுங்கு நடவடிக்கை || mahesh bhupathi refused join with leander paes
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
ஒலிம்பிக்கில் பயசுடன் ஆடமறுப்பு: மகேஷ் பூபதி மீது ஒழுங்கு நடவடிக்கை
ஒலிம்பிக்கில் பயசுடன் ஆடமறுப்பு: மகேஷ் பூபதி மீது ஒழுங்கு நடவடிக்கை
பெங்களூர், ஜூன். 16-
 
லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் பிரிவில் இருந்து லியாண்டர் பயஸ் மட்டுமே விளையாட தகுதி பெற்று உள்ளார். இரட்டையர் பிரிவில் டாப் 10 வரிசையில் உள்ளவர்கள் நேரடி தகுதி பெறலாம். பெயஸ் 7-வது இடத்தில் இருப்பதால் நேரடி தகுதி பெற்றார்.
 
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயசுடன், மகேஷ் பூபதி இணைந்து ஆடுவார் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்தது. மகேஷ் பூபதியே பயசுக்கு சிறந்த ஜோடி. கருத்து வேறுபாடுகளை மறந்து மகேஷ்பூபதி, பயசுடன் இணைந்து ஆடவேண்டும் என்று அகில இந்திய டென்னிஸ் சங்க செயலாளர் அனில் கண்ணா தெரிவித்தார்.
 
அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் இந்த முடிவுக்கு மகேஷ் பூபதி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். பயசுடன் இணைந்து ஆடமாட்டேன் என்று அறிவித்து உள்ளார்.
 
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
 
லியாண்டர் பயசுடன் இணைந்து விளையாடும் எண்ணம் எனக்கு இல்லை. டென்னிஸ் சங்கத்தின் இந்த முடிவு எனக்கு மோசமான நாளாகும். நாங்கள் இருவரும் இணைந்து 4 ஒலிம்பிக் (1996-2008) விளையாடிவிட்டோம். ஒரு பதக்கம் கூட பெறவில்லை. அப்படி இருக்கும்போது அவருடன் இணைந்து விளையாட சொல்வது சரிதானா?
 
நான் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாட விரும்புவதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். அப்படி இருந்தும் டென்னிஸ் சங்கம் இந்த முடிவு எடுத்ததன் மூலம் அரசியல் நாடகம் நடத்துகிறது. பயசுடன் இணைந்து விளையாட இளம் வீரரை தேர்வு செய்து இருக்கலாம். இரட்டையர் பிரிவில் 2 அணியை அனுப்பலாம். அதற்கான காலம் இன்னும் இருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகம் தலையிட வேண்டும்.
 
இவ்வாறு மகேஷ் பூபதி கூறியுள்ளார்.
 
மகேஷ் பூபதியின் இந்த முடிவு காரணமாக அவர் மீது அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் ஏற்கனவே 2 ஆண்டு தடை விதிப்போம் என்று எச்சரித்து இருந்தது. இதனால் அவருக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தடையை தான் சந்திக்க தயார் என்றும் மகேஷ் பூபதி அறிவித்து உள்ளார்.
 
இதற்கிடையே மகேஷ் பூபதியுடன் இணைந்து ஆடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று பயஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பேஸ்புக் அட்ராசிட்டி: நாயின் வாயை செல்லோடேப் போட்டு ஒட்டிய பெண்ணுக்காகக் காத்திருக்கும் அமெரிக்க போலீசார்

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் வீட்டில் வளர்க்கும் நாயின் வாயில் செல்லோடேப் ....»

MudaliyarMatrimony_300x100px.gif