ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் தேர்வு: உமர் அப்துல்லா வரவேற்பு || Omar welcomes Mukherjees nomination
Logo
சென்னை 02-08-2015 (ஞாயிற்றுக்கிழமை)
ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் தேர்வு: உமர் அப்துல்லா வரவேற்பு
ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் தேர்வு: உமர் அப்துல்லா வரவேற்பு
ஸ்ரீநகர்,ஜூன்.16-
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளதை, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வரவேற்றுள்ளார்.
 
மேலும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், பிரணாப்புக்கு எதிராகப் போட்டியிட முடிவு செய்து அற்பத்தனமான அரசியலில் சிக்க மாட்டார் என தான் நம்புவதாகவும் உமர் கூறியுள்ளார்.
 
இதுபற்றி ட்விட்டர் இணையதளத்தில் எழுதியுள்ள உமர், ‘பிரணாப் ஒரு சிறந்த ஜனாதிபதியாக செயல்படுவார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அற்பத்தனமாக அரசியல் செய்பவர்களுக்கு இரையாகி, தேர்தலில் போட்டியிட அப்துல்கலாம் முடிவெடுக்கக் கூடாது. கலாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என நான் நம்புகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நிலை தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ள உமர், வங்காளி ஒருவர் நாட்டின் ஜனாதிபதி ஆவதை, மம்தா எவ்வாறு எதிர்க்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல்: இந்திய வீரர்கள் பதிலடி

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த ....»

MM-TRC-B.gif