ஒலிம்பிக்: லியாண்டர் பயசுடன் மீண்டும் இணைந்து விளையாடுகிறார் மகேஷ் பூபதி || Bhupathi will join paes for Olympic
Logo
சென்னை 30-03-2015 (திங்கட்கிழமை)
  • வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம்: ஜம்மு- காஷ்மீர் முதல்வர் முப்தி
  • ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஹாடின் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு
  • திருவாரூர் கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய்
  • எல்.கே. அத்வானி, அமிதாப் பச்சன் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதை ஜனாதிபதி வழங்கினார்
ஒலிம்பிக்: லியாண்டர் பயசுடன் மீண்டும் இணைந்து விளையாடுகிறார் மகேஷ் பூபதி
ஒலிம்பிக்: லியாண்டர் பயசுடன் மீண்டும் இணைந்து விளையாடுகிறார் மகேஷ் பூபதி
பெங்களூர்,ஜுன்.15-


ஜூலை மாதம் லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் மகேஷ் பூபதியும்-, லியாண்டர் பயசும் இணைந்து விளையாடுவார்கள் என்று அகில இந்திய டென்னிஸ் சங்க தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

பெங்களூரில் இன்று நடைபெற்ற அகில இந்திய டென்னிஸ் சங்க தேர்வுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக் குழுவினர், 'கருத்து வேறுபாடுகளை மறந்து இந்தியாவுக்காக லியாண்டர் பயசும், மகேஷ் பூபதியும் இணைந்து விளையாடுவார்கள். லண்டனில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ள அணியைத் தேர்வு செய்ய வேண்டியதுதான் மிகவும் முக்கியமானது' என்றனர்.

மேலும், 'எத்தனை பேரை அனுப்புகிறோம் என்பது முக்கியமல்ல. அனுப்பும் வீரர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்பதுதான் முக்கியம். எனவே இவர்கள்தான் இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் விளையாடும் வீரர்கள்' என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இரட்டையர் ஆட்டத்தில் முன்பு வெற்றிகரமான ஜோடியாக விளங்கிவந்த மகேஷ் பூபதியும், லியாண்டர் பயசும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து விட்டனர். பின்னர் கடந்த முறை ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக அவர்கள் இணைந்து விளையாடினர். அதன்பின்னரும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு தீராததால் இருவரும் மீண்டும் பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

காஷ்மீரில் பலத்த மழை: நிலச்சரிவால் 2 வீடுகள் புதைந்தன- 16 பேரின் கதி என்ன?

காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 28–ந்தேதி முதல் பலத்த மழை பெய்து வருகிறது.தொடர்ந்து மழை ....»