காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் தேர்வு: கருணாநிதி வாழ்த்து || pranab selected for president candidate karunanidhi praise
Logo
சென்னை 07-10-2015 (புதன்கிழமை)
காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் தேர்வு: கருணாநிதி வாழ்த்து
காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் தேர்வு: கருணாநிதி வாழ்த்து
சென்னை,ஜுன்.15-
 
கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு விவகாரம் இன்று முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
எனவே பிரணாப் முகர்ஜி தான் வகித்து வந்த நிதியமைச்சர் பதவியை வரும் 22-ம் தேதி ராஜினாமா செய்ய இருக்கிறார்.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியதாவது:-
 
பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களின் துயரத்தை அறிந்தவர். மேலும் அறிவார்ந்தவராகவும், உறுதியான குடியரசுத் தலைவராகவும் செயல்படுவார். பிரசாரம் மேற்கொள்ள விரைவில் தமிழ்நாட்டுக்கு வருவார் எனவும் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

VanniarMatrimony_300x100px_2.gif