ராக்கிங் புகார்களை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கலாம்: கோவையில் மீண்டும் கிரின் கார்டர் திட்டம் || ragging complaint inform for sms via coimbatore
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
ராக்கிங் புகார்களை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கலாம்: கோவையில் மீண்டும் கிரின் கார்டர் திட்டம்
ராக்கிங் புகார்களை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கலாம்: கோவையில் மீண்டும் கிரின் கார்டர் திட்டம்
கோவை, ஜூன்.15-
 
கோவை சிங்காநல்லூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சர் கடை அதிபர் செந்தாமரை சில மர்ம மனிதர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் 7 பேரை 48 மணி நேரத்திற்குள் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
 
கொள்ளையர்கள் குறித்து அதே பகுதியில் பழவண்டியில் வியாபாரம் செய்யும் ஜெய்சங்கர் என்பவர் தகவல் கொடுத்தார். அவரது தகவலின் அடிப்படையில் தான் போலீசார் கொள்ளையர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ஜெய்சங்கரை பாராட்டி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று பரிசு வழங்கி பாராட்டினார்.பின்னர் நிருபர்களுக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
சிங்காநல்லூர் தள்ளுவண்டி பழக்கடை வியாபாரி ஜெய்சங்கர் அதே பகுதியில் பஞ்சர் கடை அதிபர் செந்தாமரையை சிலர் கடத்தி சென்ற போது கடத்தல் வாகனத்தின் எண்ணை குறித்து போலீசாரின் விசாரணைக்கு உதவி புரிந்தார். அவரது தகவலின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர். அவரை பாராட்டி பரிசு வழங்கினேன். இவரைப் போல மற்ற பொதுமக்களும் போலீசாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும்.
 
கல்லூரிகளில் ராக்கிங் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த 1 உதவி கமிஷனர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் அந்தந்த கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள ராக்கிங் தடுப்பு கமிட்டியினருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மாணவர்கள் ராக்கிங் தொடர்பாக போலீசுக்கு செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பியோ அல்லது இண்டெர்நெட் மூலம் மெயில் அனுப்பியோ புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்களின் மேல் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 
ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சப்- இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான தனிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் போலீஸ் நிலைய எல்லைப்பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்த தகவலை சேகரித்து அவர்களை கண்டுபிடிப்பர். காணாமல் போனவர்கள் பெரும்பாலும் முதியவர்களாகவே உள்ளனர். அதே சமயம் காதல் திருமணம் செய்பவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும் சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன. இவற்றை கண்காணிக்கும் வேலையை தனிப்படையினர் செய்வார்கள்.
 
கோவை அவினாசி ரோட்டில் இருந்து பீளமேடு ஏர்போர்ட் வரை கிரீன் கார்டர் திட்டம் மீண்டும் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் அவினாசி ரோட்டில் இருந்து வாகனத்தில் 40 முதல் 45 கி.மீ வேகத்தில் புறப்பட்டால் எந்தவொரு சிக்னலிலும் சிக்காமல் செல்லலாம். இத்திட்டம் இந்த மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படும்.
 
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - கோவை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif