தனித் தமிழீழம் அமைவதற்காக உயிரை விடவும் தயார்: கருணாநிதி || Karunanithi is ready to give his soul for Tamil Eelam
Logo
சென்னை 14-10-2015 (புதன்கிழமை)
  • ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் விருந்தாளியாகவே நடத்தப்பட்டார்: பாக். முன்னாள் மந்திரி அம்பலம்
  • ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்
  • எண்ணெய் கடத்தல் வழக்கில் ஈரான் சிறையில் இருந்த 9 இந்திய மாலுமிகள் விடுதலை
தனித் தமிழீழம் அமைவதற்காக உயிரை விடவும் தயார்: கருணாநிதி
தனித் தமிழீழம் அமைவதற்காக உயிரை விடவும் தயார்: கருணாநிதி
திருவாரூர்,ஜூன்.13-
 
தி.மு.க தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அவரது தொகுதியான திருவாரூரில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, தி.மு.க நிர்வாகிகள் மீது அ.தி.மு.க அரசு வேண்டுமென்றே வழக்குகள் போடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
 
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொள்கைகளை மாற்றிக் கொள்ளமாட்டோம் என்றும் கருணாநிதி கூறினார். மேலும் பேசிய அவர் திமுக நிர்வாகிகளை நீதிமன்றம் விடுவித்தாலும் கூட அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்வதாகவும் கூறினார். திருவாரூர் தொகுதியில் திமுக ஆட்சியில் பல நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டதாகவும், ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் புகார் கூறியுள்ளார்.
 
இலங்கையில் தனித் தமிழீழம் அமைப்பது பற்றி பேசும்போது, ‘தமிழ் ஈழம் அமைவதுதான் எனது வாழ்வின் லட்சியம். நான் உயிர் விடுவதற்குள் தமிழ் ஈழம் அமைவதைக் காண விரும்புகிறேன். அப்படி தமிழ் ஈழம் அமைந்து, அதற்கு அடுத்த கணமே நான் இறந்தாலும் மகிழ்ச்சிதான். நான் உயிரிழந்தால்தான் தமிழீழம் அமையும் என்றால், அதற்காக உயிரை விடவும் நான் தயார்’ என்றார் கருணாநிதி.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சகிப்புத்தன்மை குறித்து பாகிஸ்தான் எங்களுக்கு அறிவுரை கூற தேவை இல்லை: மத்திய அரசு காட்டம்

'சகிப்புத் தன்மை மற்றும் மத நல்லிணக்கம் குறித்து இந்தியாவுக்கு பாகிஸ்தானின் அறிவுரை தேவையில்லை என்று மத்திய ....»

VanniarMatrimony_300x100px_2.gif