சர்வதேச அளவில் பெண்களுக்கான சமூகநிலை குறித்த ஆய்வு: இந்தியாவிற்கு மோசமான இடம் || very bad condition for Indian womens in social responsblities
Logo
சென்னை 01-04-2015 (புதன்கிழமை)
  • ரெயில்வே நடைமேடை கட்டணம் ரூ.10 இன்று முதல் அமல்
  • ரெயில் டிக்கெட் 120 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்யும் முறை இன்று முதல் அமல்
சர்வதேச அளவில் பெண்களுக்கான சமூகநிலை குறித்த ஆய்வு: இந்தியாவிற்கு மோசமான இடம்
சர்வதேச அளவில் பெண்களுக்கான சமூகநிலை குறித்த ஆய்வு:  இந்தியாவிற்கு மோசமான இடம்
உலகில் வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகள் ஆகியவற்றில் நடத்தப்பட்டுள்ள ஆய்வொன்றில், பெண்களுக்கான நிலைமைகளில் இந்தியா மிகவும் பின்தங்கிய இடத்தில் இருக்கின்ற நாடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேசன் அமைப்பு நடத்திய இந்த ஆய்வில் பெண்களின் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, தொழில் வாய்ப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
 
உலகில் வளர்ந்து வரும் மற்றும் பொருளாதார ரீதியான முன்னேற்றம் கண்டுவரும் 19 நாடுகள் பற்றி, குறிப்பாக மெக்சிகோ,இந்தோனேசியா, பிரேசில் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பற்றி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் எதுவும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
 
இந்தியாவில் நடந்துவரும் சிறுவயது திருமணங்கள், வரதட்சிணைக் கொடுமைகள், வீட்டில் நடக்கும் வன்முறைகள், பெண் சிசுக் கொலைகள் உள்ளிட்ட விவகாரங்களால்தான் இந்தியா இந்த நாடுகளின் பட்டியலில் பெண்கள் நலனில் மிக பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. இந்தியக் குடும்பங்களில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட சட்டம் முன்னேற்றப் போக்கைக் காட்டிவருவதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
 
ஆனால் அங்கு சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாரபட்சம் காட்டப்படும் வன்முறைகள், குறிப்பாக வருமானம் குறைந்த ஏழைக் குடும்பங்களில் தாராளமாகக் காணப்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உலகில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும் தேர்தலில் வாக்களிப்பதற்கும் இதுவரை அனுமதி கொடுக்காமல் இருக்கும் சவுதி அரேபிய தேசத்தை விட இந்தியா பெண்களுக்கான அந்தஸ்து மற்றும் அங்கீகாரத்தில் கீழ் நிலையில்தான் இன்னும் இருக்கிறது என்பது வருத்தத்திற்குரிய விஷயம் ஆகும்.
 
இந்தியாவைப் பொறுத்தவரை, சமூகத்தில் பெண்களுக்கு உள்ள அந்தஸ்து மற்றும் அங்கீகாரம் என்பது அவர்களின் வர்க்கம் மற்றும் செல்வத்தைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. 
 
இங்கு 1960 - களிலேயே பெண்ணொருவரை பிரதமராக்கியிருக்கிறது. இப்போதுகூட, பெண்ணொருவர்தான் நாட்டின் குடியரசுத் தலைவராகவும் இருக்கிறார். ஆனால் இந்த நிலைமைகள் பின்தங்கிய கிராமங்களிலும் வளர்ச்சிக்குறைந்த மாநிலங்களிலும் அப்படியே தலைகீழாகத்தான் இருக்கின்றன என்பதுதான் உண்மை.
 
இந்த ஆய்வின் படி, பெண் நலன்கள் பற்றிய விஷயத்தில் கனடா முதலிடம் பிடித்துள்ளது. இதற்கடுத்த இடங்களில் ஜெர்மனியும், பிரிட்டனும் இருக்கின்றன. ஆறாம் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

ஏமனில் கடந்த வாரத்தில் மட்டும் 62 குழந்தைகள் கொல்லப்பட்டனர்: யுனிசெப் அறிவிப்பு

ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு ....»