இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு || pakistan army force firing in indian LOC
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
  • தொடர் கனமழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் பயணம்
  • கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: ஒபாமா கண்டனம்
இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு
இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு
பூஞ்ச், ஜூன். 13-
 
கடந்த இரண்டு நாட்களில் இந்திய எல்லைப் பகுதிகளை நோக்கி இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகட் பகுதியில் எல்லைக்கோட்டுக்கு அருகே இந்திய ராணுவத்தை  நோக்கி பாகிஸ்தான் ராணுவம் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது.
 
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது; சிறிய ரக துப்பாக்கிகளை வைத்து இன்று மதியம் 2 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தினரும் திருப்பிச் சுட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். அவர் உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தாண்டில் பாகிஸ்தான் எல்லை மீறுவது இது 12-வது முறையாகும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: பிரதமர் நரேந்திர மோடி வேதனை

புதுடெல்லி, அக்.23 கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் அமைந்துள்ள அந்நாட்டு பாராளுமன்றத்துக்குள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பையும் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif