திருட்டு வழக்கு விசாரணைக்காக கணவரை பிடிக்க சென்ற போலீசாரை ஆபாசமாக மிரட்டிய பெண் || theft complaint enquiry woman scold threat police
Logo
சென்னை 23-05-2015 (சனிக்கிழமை)
  • தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா
  • அமைச்சர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பதவியேற்றனர்
  • பதவியேற்பு விழா நிறைவு: அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
  • தேசிய கொடி மற்றும் சின்னம் பொருத்திய காரில் போயஸ் தோட்ட இல்லத்துக்கு புறப்பட்டார் ஜெயலலிதா
  • சொத்துக் குவிப்பு வழக்கு: கர்நாடக சட்டத்துறை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது- சித்தராமையா தகவல்
  • பாகிஸ்தானிடமிருந்து 12 மாதங்களுக்குள் முதல் அணு ஆயுதத்தை வாங்குவோம்: ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அறிவிப்பு
திருட்டு வழக்கு விசாரணைக்காக கணவரை பிடிக்க சென்ற போலீசாரை ஆபாசமாக மிரட்டிய பெண்
திருட்டு வழக்கு விசாரணைக்காக
கணவரை பிடிக்க சென்ற போலீசாரை ஆபாசமாக மிரட்டிய பெண்
நாகர்கோவில், ஜுன். 13-

கன்னியாகுமரி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது அந்த வாலிபர் வீட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்தார். போலீசாரை கண்டதும் வாலிபரின் மனைவி தனது கணவருக்கும் எந்த ஒரு திருட்டு வழக்குக்கும் சம்பந்தம் கிடையாது. அவர் இப்போது திருந்தி வாழ்கிறார் என்று போலீசாரிடம் கூறினார்.

அதற்கு போலீசார் உன் கணவரை விசாரணைக்குதான் அழைத்து செல்கிறோம் என்றனர். ஆனால் போலீசாருடன் அந்த வாலிபர் செல்ல மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் வாலிபரை குண்டுகட்டாக தூக்கி வேனுக்குள் போட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட தயாராகினர்.  அப்போது போலீஸ் வேனுக்கு முன்னால் போய் நின்ற வாலிபரின் மனைவி வேனை அங்கிருந்து நகர விடாமல் தடுத்தார்.

எனது கணவர் தவறு எதுவும் செய்யவில்லை. அவரை இறக்கி விட்டு விட்டு செல்லுங்கள் என்று கூச்சல் போட்டார். ஆனால் போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை. அந்த பெண்ணை மிரட்டி விரட்டினர். ஆனால் திடீரென அந்த பெண் தனது ஜாக்கெட்டை கிழித்து ஆபாசமாக நின்றார்.

மேலும் என் கணவரை விடாவிட்டால் என்னை மானபங்க படுத்தியதாக உயர்அதிகாரிகளிடம் புகார் செய்வேன் என்று சத்தம் போட்டு கூறினார். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் பதறி போயினர். எதற்கு வம்பு என்று நினைத்து  அந்த வாலிபரை வேனில் இருந்து இறக்கி விட்டு விட்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.        
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - கன்னியாகுமரி

section1

வெள்ளிசந்தை அருகே கர்ப்பிணி பெண்ணை தாக்கி 8 பவுன் நகை கொள்ளை

நாகர்கோவில், மே. 23–வெள்ளிசந்தை அருகே கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மதாஸ் (வயது 55). இவர் பூமி ....»

160x600.gif