ராவணன் போல் நரேந்திர மோடி செயல்படுகிறார்: திக்விஜய் சிங் தாக்கு || Digvijay Singh compares Narendra Modi to demon king Ravanan
Logo
சென்னை 31-10-2014 (வெள்ளிக்கிழமை)
  • புனே அருகே 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து
  • மராட்டிய மாநில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு
  • சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • ராமநாதபுரத்தில் போராட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • 30–ம் ஆண்டு நினைவு தினம்: இந்திரா சமாதியில் சோனியா, மன்மோகன், ராகுல் அஞ்சலி
  • இலங்கை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பார்வையிட்டார்
  • தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும்: சுப்ரமணியசாமி
  • போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான வாரன் ஆண்டர்சன் உயிரிழந்தார்
ராவணன் போல் நரேந்திர மோடி செயல்படுகிறார்: திக்விஜய் சிங் தாக்கு
ராவணன் போல் நரேந்திர மோடி செயல்படுகிறார்: திக்விஜய் சிங் தாக்கு
அகமதாபாத், ஜூன் 13-  
 
சஞ்சய் ஜோஷி மீது குற்றம் சாட்டப்பட்டு பா.ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் விமர்சித்துள்ளார்.  
 
நேற்று இரவு அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த திக்விஜய் சிங்கை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர்.
 
அப்போது, சஞ்சய் ஜோஷி மீது சுமத்தப்பட்டுள்ள சி.டி குற்றச்சாட்டு உண்மையானது அல்ல என்றும், நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் தான் அவர் பா.ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் விமர்சித்தார்.
 
'விகாஷ் புருஷ்' (முன்னேற்றத்தின் தலைவர்) என்று மோடி தன்னைக் காட்டிக் கொள்வது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு திக்விஜய் சிங் கூறியதாவது;
 
ராமாயணத்தில் வரும் ராவணன் தனது ஆட்சிப் பகுதியை நல்ல வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றிருந்தார். ஆனால் தான் கொண்டிருந்த கர்வத்தாலும் ஆணவத்தாலும் வீழ்ந்து போனார். அதே போல் நரேந்திர மோடியும் ராவணன் போல் செயல்படுகிறார்.
 
மோடி தனது கர்வத்தையும் சுய கவுரவத்தையும் விட்டுவிட வேண்டும். தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் அவர் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். தனது கர்வத்தை கைவிட்டால் அவர் தெளிவாகி விடுவார்.  
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
வரும் டிசம்பர் 2012-ல் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பா.ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் அங்கே தேர்தல் வேலைகளை இப்போதிருந்தே துவக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மந்திரியான பின்பும் இந்தி படத்தில் நடிப்பை தொடர ஸ்ம்ரிதி இராணி ஒப்புதல்

மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி அமைச்சராக பதவியேற்பதற்கு முன் நடிக்க ஒப்புக்கொண்ட படத்தின் ....»