ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு: 60 க்கும் மேற்பட்டோர் பலி || A wave of bombings in six Iraqi provinces
Logo
சென்னை 15-09-2014 (திங்கட்கிழமை)
  • ஈரோடு: பவானி அடுத்த தளவாய்பேட்டை துணை மின்நிலையத்தில் தீ விபத்து
  • சென்னை: கலைஞர் அரங்கில் திமுக சார்பில் இன்று மாலை முப்பெரும் விழா
  • பூந்தமல்லியில் இன்று வைகோ தலைமையில் மதிமுக மாநாடு
  • சீன அதிபர் இந்தியா வருகை குறித்து அரசியல் கட்சிகள் விமர்சனம்
ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு: 60-க்கும் மேற்பட்டோர் பலி
ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு: 60-க்கும் மேற்பட்டோர் பலி
பாக்தாத், ஜூன். 13-
 
ஈராக் தலைநகர் பாக்தாதில் ஷியா முஸ்லிம்கள் தங்களது மத வழிபாட்டு தளங்களில் கூடியிருந்தனர். சில இடங்களில் மத ஊர்வலங்களும் நடத்தப்பட்டன.
 
அந்த நேரத்தில் அப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களில் வைத்திருந்த குண்டு வெடித்தது. இதே போன்று கிர்குக், ஹில்லா ஆகிய 10 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது.
 
இந்த தொடர் குண்டுவெடிப்பில் 62 பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. கடந்த சில நாட்களாக ஈராக்கில் அப்பாவி மக்கள் மற்றும் ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டு வருவது அங்கே பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

பெருவில் பேருந்து மலையிலிருந்து சரிந்து உருண்டது: 26 பேர் பலி

தென்கிழக்கு பெருவில் உள்ள மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு குழந்தைகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் ....»