இந்தியாவில் பிறந்த பிரபல பாகிஸ்தான் பாடகர் மரணம் || Ailing ghazal legend Mehdi Hassan passes away
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
  • கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
  • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது
  • காஞ்சிபுரம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை
  • மத்திய குழு சென்னை வந்தது: முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் இன்று சந்திப்பு
  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்தது
இந்தியாவில் பிறந்த பிரபல பாகிஸ்தான் பாடகர் மரணம்
இந்தியாவில் பிறந்த பிரபல பாகிஸ்தான் பாடகர் மரணம்
கராச்சி, ஜூன். 13 -
 
தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் பிரபலமான கஸல் பாடகர்களில் ஒருவரான மெஹ்தி ஹசன்,  உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில், உடல்நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டிருந்த மெஹ்தி ஹசன் இன்று மதியம் மரணமடைந்தார். அவருக்கு வயது 84.
 
இந்தியாவிலுள்ள ராஜஸ்தான் மாநிலம், லூனா கிராமத்தில் 1927-ல் பிறந்த இவர், இந்துஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். காதல் தோல்வி பாடல்களான, கஸல் கீதங்களைப் பாடுவதில் மன்னர் என்று பேசப்பட்டவர் மெஹ்தி ஹசன்.
 
பாரம்பரிய இசைக் குடும்பத்திலிருந்து வந்த இவர், இளம் வயதிலேயே இசைப் பயிற்சி பெற்ற பின்னர், பெரிய அளவில் வர்த்தக ரீதியிலும் வெற்றி பெற்றார். தெற்காசியாவின் பல திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்தார்.
 
பாகிஸ்தானின் கலாச்சாரத் தூதரான இவர், இந்தியாவிலும் மிகப்பிரபல பாடகராக விளங்கினார். இந்தியாவிற்கும் அவர் பல முறை வருகை புரிந்திருக்கிறார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

பஸ் வெடிகுண்டு தாக்குதல் எதிரொலி: லிபியாவுடனான எல்லையை முடக்கியது துனிசியா

துனிசியா நாட்டின் தலைநகர் துனிசில் அதிபரின் பாதுகாப்பு படை வீரர்கள் ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்த ....»