முசிறியில் ஐஸ்வர்ய மகாலெட்சுமி கோவிலில் அமைச்சர் பன்னீர்செல்வம் வழிபாடு || minister o panneerselvam worship mahalakshmi temple
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
முசிறியில் ஐஸ்வர்ய மகாலெட்சுமி கோவிலில் அமைச்சர் பன்னீர்செல்வம் வழிபாடு
முசிறியில் ஐஸ்வர்ய மகாலெட்சுமி கோவிலில் அமைச்சர் பன்னீர்செல்வம் வழிபாடு
முசிறி,ஜுன்.13-

முசிறி அடுத்துள்ள வெள்ளுரில் சிவகாமசுந்தரி, உடனுறை, திருகாமேஷ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. மேலும் இங்குள்ள வில்வமரத்தடியில் அமர்ந்துள்ள ஐஸ்வர்ய மகுடத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகாலெட்சுமியை வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

மேலும் மூலவர் திருக்காமேஷ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவராக சிவபக்தர்கள் கருதுகின்றனர். இவரை வழிபட்டால் நிலைத்த உயர் பதவி, எதிரிகளை வெல்லும் வீரம், புகழ், நற்பெயர், நீடித்த செல்வம் ஆகியவை கிடைக்கும் என்றும் இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வெள்ளுர் சிவாலயத்திற்கு காரில் வருகை புரிந்தார். அவருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ பூனாட்சி, முன்னாள் எம்எல்ஏ பிரின்ஸ் தங்கவேல், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், ஒன்றிய செய லாளர் ராஜமாணிக்கம், ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி கிருஷ்ணன், முசிறி பேரூராட்சி தலைவர் மாணிக்கம், வெள்ளூர் ஊராட்சி தலைவர் முத்துக்குமரன் மற்றும் கட்சியினர் ஜெயராமன், கோவில் செயல் அலுவலர் ஜெய்கிஷான் ஆகியோர் வரவேற்றனர்.

மூலவர் திருக்காமேஷ்வரர், உடனுறை, சிவகாமசுந்தரி, தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. ஐஸ்வர்ய மகாலெட்சுமிக்கு பால், பன்னீர், பழங்கள், உள்ளிட்ட பல்வேறு திரவி யங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர் மலர் அலங்காரத்துடன் ஐஸ்வர்ய மகாலெட்சுமி அலங்கரிக்கப்பட்டார். நிதியமைச்சர் பன்னீர்செல்வம் ஐஸ்வர்ய மகாலெட்சுமியை 16 விளக்குகள் ஏற்றியும், 16 தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தும் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் அவரது நட்சத்திரம், ராசி ஆகியவற்றிற்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடைபெற்றது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திருச்சி

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif