கோயம்பேடு மார்க்கெட்டில் 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா || koyambedu market 30 place Surveillance camera
Logo
சென்னை 05-03-2015 (வியாழக்கிழமை)
  • வங்கி ஊழியர்கள் 6-ந்தேதி ஆர்ப்பாட்டம்
  • அ.தி.மு.க.வில் இருந்து சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் உள்பட 2 பேர் நீக்கம்: ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை
  • தர்மபுரியில் மின்னல் தாக்கி 4 பேர் பலி
  • அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே கேப்டன் சிகும்புரா ஆடமாட்டார்
  • உலக கோப்பை கிரிக்கெட்: ஸ்காட்லாந்து 136/3 (28)
கோயம்பேடு மார்க்கெட்டில் 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா
கோயம்பேடு மார்க்கெட்டில் 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா
சென்னை, ஜூன் 13-

ஆசியாவில் உள்ள மிகப் பெரிய மார்க்கெட்டுகளில் ஒன்றான கோயம்பேடு மார்க்கெட் திகழ்கிறது. இங்கு, பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள், வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் தவிர தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் காய்கறி, பழங்கள் வந்து இறங்குகின்றன. ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.

எனவே பெருமளவில் மக்கள் கூடும் இந்த மார்க்கெட்டை தீவிரமாக கண்காணிக்கவும், மேம்படுத்தவும் தமிழ்நாடு நகர்புற கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக கோயம்பேடு மார்க்கெட்டில் 30 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான ஆலோசனைகளை போலீஸ் துறை வழங்கி வருகிறது.

மேலும், மார்க்கெட்டின் உட்புறத்தில் ரூ.33 கோடி செலவில் கான்கிரீட் சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இவற்றின் 90 சதவிதம் பணி முடிவடைந்து விட்டது. முழு பணியும் வருகிற ஜூலை மாதத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவு தானிய மார்க்கெட் கட்டுமான பணி ரு.60 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இங்கு பார்க்கிங் வசதியுடன் கூடிய 500 கடைகள் கட்டப்பட உள்ளன. அதற்கான ஆயத்த பணிகள் முடிந்து விட்டன. இந்த தகவலை கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் விண்ணில் செலுத்துவது தள்ளிவைப்பு

பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் வருகிற 9-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில் கடைசி நேரத்தில் கோளாறு ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif