லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்: குப்பைகள் தேங்கும் அபாயம் || lorry driver strike debris danger
Logo
சென்னை 01-09-2015 (செவ்வாய்க்கிழமை)
லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்: குப்பைகள் தேங்கும் அபாயம்
லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்:
குப்பைகள் தேங்கும் அபாயம்
சென்னை, ஜூன் 13-

குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொள்ள சென்னை மாநகராட்சியுடன் ராம்கி என்விரோ என்ஜினீயர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி அந்த நிறுவனம் சென்னையில் உள்ள தேனாம்பேட்டை, அடையாறு, கோடம்பாக்கம் ஆகிய 3 மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே அந்த நிறுவனத்தின் குப்பை லாரி டிரைவர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பளத்தை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

லாரி டிரைவர்கள் ஸ்டிரைக் காரணமாக குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தேனாம் பேட்டை மண்டலத்தில் குப்பைகள் அதிகமாக தேங்கி உள்ளது. கடந்த 2 தினங்களாக குப்பை லாரிகள் முழுமையாக ஓடவில்லை. இன்று ஒரு சில லாரிகள் இயங்கின. போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படாவிட்டால் குப்பைகள் அதிகமாக தேங்கும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

வேளச்சேரியில் வாலிபர் தற்கொலை

வேளச்சேரி செப்.1–வேளச்சேரி காந்தி தெருவில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம். இவரது மகன் மூர்த்தி (வயது 28). ....»