பழிக்கு பழி வாங்க தே.மு.தி.க. தொண்டருக்கு அரிவாள் வெட்டு பம்மல் நகர தி.மு.க. செயலாளர் கைது || dmk secretary arrested dmdk member attack pammal
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
பழிக்கு பழி வாங்க தே.மு.தி.க. தொண்டருக்கு அரிவாள் வெட்டு பம்மல் நகர தி.மு.க. செயலாளர் கைது
பழிக்கு பழி வாங்க தே.மு.தி.க. தொண்டருக்கு அரிவாள் வெட்டு பம்மல் நகர தி.மு.க. செயலாளர் கைது
தாம்பரம், ஜூன்.13-

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்தவர்கள் சிட்டிபாபு, சதாம், செல்வகுமார் 3 பேரும் தே.மு.தி.க. தொண்டர்கள். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. தொண்டர் விஜய பாரதிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் விஜயபாரதி தனியாக வந்தபோது சிட்டிபாபு, சதாம் ஆகியோர் வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு ஓடி விட்டனர். அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

விஜயபாரதியின் நண்பர் வெ.கருணாநிதி. இவர் தற்போது பம்மல் நகர தி.மு.க. செயலாளராக உள்ளார். இதற்கு முன்பு இவர் பம்மல் நகராட்சித் தலைவராகவும் இருந்தார். விஜயபாரதியை வெட்டிய கும்பலை பழிக்குப் பழிவாங்க வெ.கருணாநிதி மற்றும் நண்பர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிட்டி பாபுவின் நண்பர் செல்வகுமார் பல்லாவரத்தில் உள்ள பம்மல் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது விஜயபாரதியின் கூட்டாளிகள் 5 பேர் கும்பலாகச் சென்று செல்வகுமாரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

இதுபற்றி பல்லாவரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து வெ.கருணாநிதி, அரவது மகன் கண்ணப்பராஜை கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேர் கும்பலை வலைசீசி தேடிவருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - காஞ்சிபுரம்

section1

பொத்தேரியில் நாளை மின்தடை

கூடுவாஞ்சேரி, பிப். 7–பொத்தேரி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 9மணி முதல் மாலை ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif