டீசல் கார் விலை உயருகிறது: எஸ்.ஜெயபால் ரெட்டி || diesel car price increase
Logo
சென்னை 21-10-2014 (செவ்வாய்க்கிழமை)
டீசல் கார் விலை உயருகிறது: எஸ்.ஜெயபால் ரெட்டி
டீசல் கார் விலை உயருகிறது: எஸ்.ஜெயபால் ரெட்டி
பெட்ரோலிய துறை மந்திரி எஸ்.ஜெயபால் ரெட்டி, திட்ட மதிப்பீடு ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதை அரசு ஏற்றுக் கொள்ளுமானால் சிறிய ரக டீசல் கார்களின் விலை ரூ.1.7 லட்சம் வரையிலும் பெரிய ரக டீசல் கார்களின் விலை ரூ.2.55 லட்சம் அளவுக்கும் உயரும் என்று கூறப்படுகிறது.

அவரது திட்ட அறிக்கையில், டீசல் கார்களுக்கு கூடுதல் உற்பத்தி வரி விதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அப்படி கூடுதல் வரி விதிக்கப்பட்டால், டீசல் கார்களின் விலை அதிகரிப்பதுடன், விற்பனை கணிசமாக குறையும் என்று கார் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வு மற்றும் கார் கடன்களுக்கான வட்டி அதிகரிப்பு போன்ற காரணங்களால் உள்நாட்டில் கார் விற்பனை 24 சதவிகிதம் குறைந்து விட்டதாக கார் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மரணத்துக்கு பிறகும் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங். எம்.எல்.ஏ. தொகுதியில் 8–ந்தேதி இடைத்தேர்தல்

ஐதராபாத், அக் 21–ஆந்திர சட்டசபை தேர்தலின் போது அல்கட்டா தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக ஷோபா ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif