சென்னையில் நடந்து சென்ற 4 பெண்களிடம் ரூ.6 லட்சம் நகை பறிப்பு: மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் கைவரிசை || chennai ladies chain snatching motor cycle robbers
Logo
சென்னை 21-10-2014 (செவ்வாய்க்கிழமை)
சென்னையில் நடந்து சென்ற 4 பெண்களிடம் ரூ.6 லட்சம் நகை பறிப்பு: மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் கைவரிசை
சென்னையில் நடந்து சென்ற 4 பெண்களிடம் ரூ.6 லட்சம் நகை பறிப்பு: மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் கைவரிசை
சென்னை, ஜூன். 13-
 
நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் சென்னையில் தொடர் கதையாக உள்ளது.  
 
சென்னை மைலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (40). இவர் நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர், உமா மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இதுகுறித்து மைலாப்பூர் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.  
 
சென்னை வேப்பேரி நரசிங்க பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சசிகலா (45). இவர் காய்கறி வாங்குவதற்காக இன்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர் சசிகலா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். 7 சவரன் எடை கொண்ட இந்த சங்கிலி பறிப்பு குறித்து வேப்பேரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.  
 
சேத்துப்பட்டை சேர்ந்தவர் நளினி (55). இவர் அடையாறில் உள்ள மேயர் ராமநாதன் தெருவில் இன்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது 6 சவரன் தங்க சங்கிலியை ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன் பறித்து சென்று விட்டான். இதுகுறித்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
 
திருவான்மியூர் இந்திரா நகர் 28-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் திலீபன். இவரது மனைவி சுசிலா (48). இன்று காலை சுசிலா வாக்கிங் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் சுசிலா கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க தாலியை பறித்தனர். அவர் கூச்சல் போட்டார். ஆனால் அவர்கள் தாலியுடன் தப்பி ஓடிவிட்டனர்.  
 
இந்த 4 சம்பவங்களிலும் மொத்தம் 30 சவரன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த திருடர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.6 லட்சத்துக்கும் அதிகமாகும்.
 
நேற்று முன்தினம் சென்னையில் ஒரே நாளில் 4 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். கடந்த வாரம் ஒரே நாளில் 6 பெண்களிடம் வழிப்பறி நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.112 உயர்வு

சென்னை, அக் 21–சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 664 ஆக இருந்தது. ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif