உலக கோப்பையைவிட ஐ.பி.எல். போட்டியை அதிகம் பேர் பார்த்தனர்: ராஜீவ் சுக்லா || world cup IPL Game win rajive sukhla
Logo
சென்னை 27-02-2015 (வெள்ளிக்கிழமை)
உலக கோப்பையைவிட ஐ.பி.எல். போட்டியை அதிகம் பேர் பார்த்தனர்: ராஜீவ் சுக்லா
உலக கோப்பையைவிட ஐ.பி.எல். போட்டியை அதிகம் பேர் பார்த்தனர்: ராஜீவ் சுக்லா
மும்பை, ஜூன். 13-
 
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவரும், ஐ.பி.எல். அமைப்பின் தலைவருமான ராஜீவ் சுக்லா நிருபர்களிடம் கூறியதாவது:-  
 
5-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியை டெலிவிஷனில் 255 கோடி பேர் பார்த்து உள்ளனர். இது கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பையைவிட அதிகமானது.
 
உலக கோப்பை போட்டியைவிட ஐ.பி.எல். போட்டியைதான் அதிகமான பேர் டெலிவிஷனில் பார்த்து உள்ளனர். உலகக் கோப்பை கால் பந்து மற்றும் அதற்கு அடுத்த உள்ள மிகப்பெரிய போட்டிக்கு அருகில் ஐ.பி.எல். போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை இருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்திய பார்வையாளர்களை மட்டுமே நான் சொல்கிறேன். இண்டர்நெட்டில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்து உள்ளது.  
 
ஐ.பி.எல். போட்டியில் 4 பிளே ஆப் ஆட்டம் நடந்தது. இந்த பிளே ஆப் ஆட்டத்தின் டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் ரூ.13 கோடி கிடைத்தது. அரசுக்கு ரூ.2.80 கோடி கேளிக்கை வரி செலுத்தியதுபோக இந்த தொகை கிடைத்தது.
 
இந்த சீசனில் டிக்கெட் விற்பனை மூலம் ஐ.பி.எல். உரிமையாளர்களுக்கு கூடுதல் பணம் கிடைத்தது. ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக விசாரணை அறிக்கை குறித்து கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஆய்வு செய்யும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
ஐ.பி.எல். தலைவரான ராஜீவ் சுக்லா மத்திய மந்திரியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம்: இந்தியாவில் 29 கோடி பேர் டெலிவிஷனில் பார்த்தனர்

உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் கடந்த 15-ந் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif