லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு 76 இந்தியர்கள் தகுதி || London olympic indians qualified
Logo
சென்னை 25-01-2015 (ஞாயிற்றுக்கிழமை)
  • வாஷிங்டனில் இருந்து புறப்பட்டார் ஒபாமா
  • சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீடு: கர்நாடக ஐகோர்ட்டில் சுப்பிரமணியசாமி புதிய மனு
  • ஒபாமாவுக்கு அமெரிக்க பத்திரிகை வேண்டுகோள்
  • ஆதார் அட்டை அடிப்படையில் வாக்காளர் பட்டியல்: தேர்தல் கமிஷன் முடிவு
லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு 76 இந்தியர்கள் தகுதி
லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு 76 இந்தியர்கள் தகுதி
புதுடெல்லி, ஜூன். 13-
 
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்தது.
 
இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஜூலை 27-ந்தேதி முதல் ஆகஸ்டு 12-ந்தேதி வரை நடக்கிறது. லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து இதுவரை 13 விளையாட்டுகளில் இருந்து 76 பேர் தகுதி பெற்று உள்ளனர். இதில் 56 பேர் ஆண்கள், பெண்கள் 20 பேர் ஆவார்கள். 85 பேர் வரை ஒலிம்பிக் போட்டி தகுதி பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய விளையாட்டு மந்திரி அஜய் மக்கான் தெரிவித்தார்.
 
தடகளத்தில் இருந்து 13 பேரும், துப்பாக்கி சுடுதலில் இருந்து 11 பேரும், மல்யுத்தத்தில் இருந்து 5 பேரும், குத்துச்சண்டையில் இருந்து 8 பேரும் தகுதி பெற்று உள்ளனர்.
 
இந்திய ஆக்கி அணியும் (16 பேர்) தகுதி பெற்று இருந்தது. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 56 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெண்கலம் ஆக மொத்தம் 3 பதக்கம் பெற்றது.
 
துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் தங்கம் வென்று பெருமை தேடி தந்தார். குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங்கும் (மிடில் வெயிட்) மல்யுத்தத்தில் சுசில் குமாரும் (66 கிலோ பிரிவு) வெண்கல பதக்கம் பெற்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

இந்திய பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு சாய்னா முன்னேற்றம்

இந்திய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். சிந்து அரை ....»