நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் மகனை தேடி வந்த தந்தை: என்ஜினீயர் வேலையை உதறிவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபட்டவர் || Nithyanatha mutt son father engineering work
Logo
சென்னை 10-10-2015 (சனிக்கிழமை)
நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் மகனை தேடி வந்த தந்தை: என்ஜினீயர் வேலையை உதறிவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்
நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் மகனை தேடி வந்த தந்தை: என்ஜினீயர் வேலையை உதறிவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்
பெங்களூர், ஜூன்.13-
 
நித்தியானந்தா ஆசிரமத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் தனது மகனை தேடி வந்தார். அவர் ஆசிரம நிர்வாகிகளிடம் புகைப் படத்தை காட்டி விசாரித்தது சோகமாக இருந்தது.  
 
திண்டுக்கல்லை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகன் சீனிவாஸ். இவர் நித்தியானந்தாவின் தியான பீட ஆசிரமத்தில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அவரை தேடி ராதாகிருஷ்ணன் ஆசிரமத்துக்கு நேற்று வந்தார்.
 
தனது மகனின் புகைப்படத்தை ஆசிரம நிர்வாகிகளிடம் காண்பித்து, அவனை அழைத்து செல்ல உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், ஆசிரமத்தில் சீனிவாஸ் இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை.
 
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-  
 
எனது மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன். அவன் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தான். மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம் கிடைத்தது.
 
இந்த நிலையில், கடந்த 3 1/2 ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா ஆசிரமத்தில் வந்து சேர்ந்தான். அதன்பிறகு கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு வரை அவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டு இருந்தேன். அதன்பிறகு இன்று வரை அவனுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. என் மகன் எங்கு இருக்கிறான் என்பது தெரியவில்லை.  
 
இந்த நிலையில், பிடதி ஆசிரமத்துக்கு பூட்டு போட கர்நாடக அரசு உத்தரவிட்டு இருப்பதாகவும், இதனால் ஆசிரமத்தில் தங்கி இருக்கும் சீடர்கள் வெளியேறி வருவதாகவும் தகவல் கிடைத்து இங்கு வந்து உள்ளேன். என் மகன் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தால், அவனை அழைத்து செல்ல காத்து இருக்கிறேன்.
 
இவ்வாறு ராதாகிருஷ்ணன் சோகத்துடன் கூறினார்.
 
இதற்கிடையே ஆசிரமத்தில் இருக்கும் அவரது மகன் சீனிவாஸ் தன் தந்தையிடம் “எனக்கு எல்லாமே நித்தியானந்தாதான். நீங்கள் ஊருக்கு புறப்பட்டு செல்லுங்கள்“ என்று கூறியதாக தெரிகிறது. இருந்தாலும் அவர் தனது கையில் மகன் சீனிவாசின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு ஆசிரமத்தில் இருந்து வெளியே வருபவர்களிடம் காண்பித்து மகன் பற்றிய தகவலை விசாரித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மீண்டும் ஊழல் புகார் வரக் கூடாது: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை

புதுடெல்லி, அக். 10–டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ....»