சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரம்: ஐ.நா.சபை எச்சரிக்கை || syria domestic war increase UN warning
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
  • 2015-16 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்திய பொருளாதாரம் ஜி.டி.பி 7.3 சதவீதமாக உயர்வு
  • காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றார் காபு சமூக தலைவர் பத்மநாபம்
சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரம்: ஐ.நா.சபை எச்சரிக்கை
சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரம்: ஐ.நா.சபை எச்சரிக்கை
டமாஸ்கஸ், ஜூன்.13-
 
சிரியாவில் அதிபர் பஷர்-அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 14 மாதங்களாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அவர்களை ராணுவம் கொன்று குவிக்கிறது. இதுவரை சுமார் 12 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு ஐ.நா.சபையும், உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
ஐ.நா.வின் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தமும் ஏற்பட்டது. இருந்தும் அதை சிரியா அரசு மீறிவிட்டது. போராடும் மக்கள் மீது ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது. எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க 9 முதல் 13 வயது வரையிலான சிறுவர்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கு செக்ஸ் தொல்லையும் கொடுத்து வருகிறது.
 
இச்சம்பவம் அட்லிப் மாகாணத்தில் நடந்ததாக ஐ.நா. கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட 50 சிறுவர் சிறுமிகள் தாக்குதலின்போது கொல்லப்பட்டுள்ளனர். மொத்தத்தில் கடந்த 14 மாதங்களாக நடந்து வரும் கலவரத்தில் 1200 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.  
இதற்கிடையே நேற்று அல்ஹமீ என்ற நகரில் ஐ.நா.குழு கண்காணிப்பு பணிக்காக சென்றது. அவர்களது வாகனங்கள் மீது அதிபர் ஆசாத் ஆதரவாளர்கள் கற்கள் மற்றும் இரும்பு துண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். வாகனங்களுக்கு தீ வைக்க முயன்றனர். எனவே அவர்கள் அங்கிருந்து தப்பி வந்துவிட்டனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
 
இச்சம்பவம் குறித்து ஐ.நா. சமாதான கமிட்டியின் துணை செயலாளர் லாட்சோயஸ் கூறியதாவது:-  
 
தற்போது சிரியாவில் உள்நாட்டு போர் நடக்கிறது. பெரும்பாலான நகரங்கள் மற்றும் பகுதிகளை சிரியா அரசு இழந்து விட்டது. அவை எதிர்ப்பாளர்கள் கையில் உள்ளது. எனவே அவற்றை கைப்பற்றி மீண்டும் தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டுவர அரசு தீவிர முயற்சி மேற்கொள்கிறது.
 
ஹப்பா நகரில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள ராணுவம் அனுமதி அளித்தது. ஆனால் அங்கு எங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் திரும்பி விட்டோம் என தெரிவித்தார்.
 
கலவரத்தை அடக்க சிரியாவுக்கு ரஷியா ஹெலிகாப்டர்களை விற்பனை செய்துள்ளது. இதற்கு அமெரிக்கா வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

அமெரிக்காவில் பூனை மீது வெந்நீரை ஊற்றி வீடியோ வெளியிட்டவர் கைது

சிகாகோ, பிப். 8–அமெரிக்காவில் உள்ள சிகாகோவை சேர்ந்தவர் லியோன் டேக் (வயது 18). இவர் தனது ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif