தென்காசி பள்ளியில் மாணவிகளை சில்மிஷம் செய்த ஆசிரியர் சஸ்பெண்டு || teacher suspend in tenkasi school for bad character
Logo
சென்னை 15-02-2016 (திங்கட்கிழமை)
தென்காசி பள்ளியில் மாணவிகளை சில்மிஷம் செய்த ஆசிரியர் சஸ்பெண்டு
தென்காசி பள்ளியில் மாணவிகளை சில்மிஷம் செய்த ஆசிரியர் சஸ்பெண்டு
தென்காசி, ஜூன்.13-
 
நெல்லை மாவட்டம் தென்காசி கீழப்பாறையடி தெருவில் நகராட்சி நடுநிலைப் பள்ளிக் கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
 
தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன்குளத்தைச் சேர்ந்த ஆண்டி (வயது 37) என்பவர் அங்கு ஆசிரியராக வேலை செய்து வந்தார். பள்ளிக்கூடத்தில் படித்து வரும் சிறுமிகளிடம் ஆசிரியர் ஆண்டி சில்மிஷம் செய்ததாக புகார் கூறப்பட்டது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாணவிகளின் பெற்றோரும், பொதுமக்களும் பள்ளிக்கூடம் அருகே நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
 
இது பற்றி தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி சுடலைமணி விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில், மாணவிகளை சில்மிஷம் செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் ஆண்டி மீது நேற்று துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆசிரியர் ஆண்டியை ‘சஸ்பெண்டு‘ (தற்காலிக பணி நீக்கம்) செய்து மாவட்ட கல்வி அதிகாரி சுடலைமணி உத்தரவிட்டுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif