4 அறைகளுக்கு சீல்: நித்யானந்தா ஆசிரமத்தில் இன்று 2 வது நாளாக சோதனை || today two days raid nithiyanantha ashram
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
4 அறைகளுக்கு சீல்: நித்யானந்தா ஆசிரமத்தில் இன்று 2-வது நாளாக சோதனை
4 அறைகளுக்கு சீல்: நித்யானந்தா ஆசிரமத்தில் இன்று 2-வது நாளாக சோதனை
பெங்களூர், ஜுன். 13-

பெங்களூர் அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா மீது ஆர்த்தி ராவ் என்ற அவரது முன்னாள் பெண் சீடர் சமீபத்தில் பாலியல் கொடுமை புகார் கூறினார். இது தொடர்பாக அவர் கன்னட டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்தார். இந்த நிலையில் நித்யானந்தாவின் பேட்டிக்கு வந்த கன்னட டி.வி. சேனல் நிருபர் தாக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

நித்யானந்தா ஆசிரமத்தில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதாக கூறி கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து நித்யானந்தா ஆசிரமம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ராமன்நகர் கலெக்டருக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது.

மேலும் நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யவும், ஆசிரமத்துக்கு சீல் வைக்கவும் முதல்-மந்திரி சதானந்தாகவுடா உத்தரவிட்டார். நேற்று மாலையில் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் பேரில் கோர்ட்டு அனுமதியுடன் மாலை 5.30 மணிக்கு போலீசார் ஆசிரமத்துக்குள் நுழைந்து சோதனையை தொடங்கினார்கள். போலீஸ் சூப்பிரண்டு அனுபவ் அகர்வால் தலைமையில் போலீஸ் குழு முதலில் சென்று சோதனை நடத்தியது. தொடர்ந்து கலெக்டர் அர்ச்சனா தலைமையில் ஒரு குழுவும், கலெக்டர் ஸ்ரீராம்ரெட்டி தலைமையில் அதிகாரிகள் குழுவும் அடுத்தடுத்து ஆசிரமத்துக்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

பரந்து விரிந்த 22 ஏக்கர் ஆசிரமத்தில் 7 அறைகள் உள்ளன. இதில் நேற்று இரவு வரை 4 அறைகள் மட்டுமே சோதனையிடப்பட்டன. அந்த அறைகளில் இருந்த கம்ப்யூட்டர்கள், சி.டி.க்கள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. சோதனைக்குப்பின் 4 அறைகளும் இரவில் சீல் வைக்கப்பட்டன.

இன்று மீதம் உள்ள 3 அறைகளில் 2-வது நாளாக சோதனை நடந்தது. போலீசாரின் சோதனையால் ஆசிரமத்தில் இருந்த சீடர்கள் வெளியேறி வருகிறார்கள். அவர்களையும் சோதனையிட்ட பின்பே போலீசார் வெளியே அனுமதித்தனர். அப்போது வெளிநாட்டு பெண் எடுத்துச்சென்ற சி.டி.யை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்த 2 நாட்களாக வழக்கமாக வரும் பக்தர்கள் யாரும் ஆசிரமத்துக்கு வரவில்லை. நித்யானந்தா ஆசிரமத்தில் கைப்பற்றிய கம்ப்யூட்டர், சி.டி. ஹார்டு டிஸ்க்குகள் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுபவ் அகர்வால் தெரிவித்தார்.

இதற்கிடையே நித்யானந்தாவை கைது செய்ய போலீஸ் படை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒரு தனிப்படை தமிழ் நாட்டுக்கும், மற்றொரு தனிப்படை ஆந்திராவுக்கும் விரைந்துள்ளது. ஆனால் நித்யானந்தா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

நித்யானந்தாவுக்கு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. இங்கு ஏதாவது ஒன்றில் தலைமறைவாக இருக்கலாம். இதனால் அவரை உடனடியாக தேடி கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த முறை ரஞ்சிதா விவகாரத்தில் போலீசார் தமிழ்நாடு, கர்நாடகாவில் நித்யானந்தாவை தேடிக் கொண்டு இருந்தபோது பல மாதங்கள் கழித்து இமாச்சல பிரதேச மாநிலத்தில் சிக்கினார். அதேபோல் இம் முறையும் அவரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நித்யானந்தா மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தா தரப்பில் வக்கீல் ரவி பி. நாயக் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. இந்த மனு மீது கோர்ட்டு அளிக்கும் தீர்ப்பை பொறுத்து, நித்யானந்தா முன் ஜாமீன் தாக்கல் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

நித்யானந்தா ஆசிரம சோதனை பற்றி முதல்- மந்திரி சதானந்தா கவுடா கூறியதாவது:-

நித்யானந்தா விஷயத்தில் காலதாமதமாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று சிலர் கேட்கின்றனர். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு முடிவு எடுத்து அரசு தனது கையை சுட்டு கொள்ள முடியாது. அரசின் முடிவு குறித்து யாரும் கேள்வி கேட்கக்கூடாது. சட்ட சிக்கலில் அரசை மாட்டி விடக் கூடாது என்பதற்காக நன்கு ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

காலதாமதம் ஆனதற்கு அதுவே காரணம். நித்யானந்தா விவகாரத்தை தினமும் நான் கவனித்து வருகிறேன். சட்டத்தில் உள்ள சாதக மற்றும் பாதங்களை ஆராய்ந்து, இந்த முடிவுகளை எடுத்து இருக்கிறோம். நித்யானந்தா ஆசிரமத்திற்கு சீல் வைக்கும்படி உத்தர விட்டது சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட்டு இருக்கிறோம்.

இவ்வாறு சதானந்த கவுடா கூறினார்.    
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பிரதமர் மோடியுடன் ஆரக்கிள் தலைமை செயல் அதிகாரி சந்திப்பு: பெங்களூரில் கேம்பஸ் அமைக்க திட்டம்

சர்வதேச அளவில் முன்னணி கணினி தொழில்நுட்ப நிறுவனமாக திகழ்ந்து வரும் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை செயல் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif