இந்தோனேஷிய பேட்மிண்டனில் சாய்னா || saina in indonesian badminton
Logo
சென்னை 01-03-2015 (ஞாயிற்றுக்கிழமை)
இந்தோனேஷிய பேட்மிண்டனில் சாய்னா
இந்தோனேஷிய பேட்மிண்டனில் சாய்னா
தாய்லாந்து பேட்மிண்டன் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அடுத்ததாக ஜகர்த்தாவில் இன்று தொடங்கும் இந்தோனேஷியா சூப்பர் சீரிஸ் போட்டியில் பங்கேற்கிறார்.
 
உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் அவர் தொடக்க சுற்றில் ஜப்பானின் சயகாவுடன் மோதுகிறார். சயகாவுக்கு எதிராக இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி அதில் சாய்னா 3-ல் வெற்றி பெற்றிருக்கிறார்.
 
தொடக்க சுற்று தடைகளை கடந்து அவர் கால்இறுதிக்கு வந்தால் அதன் பிறகு தான் உண்மையான சவால் காத்திருக்கிறது. கால்இறுதியில் அவர் 3-ம் நிலை வீராங்கனை சீனாவின் ஷிஸியான் வாங்கை சந்திக்க வேண்டி வரலாம்.
 
இது குறித்து சாய்னா கூறுகையில், இந்த போட்டி மிகவும் சவாலாக இருக்கும். அனைத்து சீன வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். குறிப்பிட்ட நாளில் ஆட்டம் எப்படி இருக்கிறதோ அதை பொறுத்தே முடிவு அமையும். பட்டம் வெல்வது குறித்து எந்த உறுதியும் அளிக்க முடியாது. ஆனால் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்றார். காஷியாப், ஜுவாலா கட்டா, திஜு, அஸ்வினி ஆகிய இந்தியர்களும் களம் இறங்குகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஜோ ரூட் ஜோரான சதம்: உலக கோப்பையில் இங்கிலாந்து 309 ரன்கள் குவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் நகரில் ஆட்டம் நடைபெற்று வருகின்றது. ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif