திருவாரூர் சென்றடைந்தார் கருணாநிதி: இன்று மாலை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் || karunanidhi reached thiruvarur today evening speech
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
திருவாரூர் சென்றடைந்தார் கருணாநிதி: இன்று மாலை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
திருவாரூர் சென்றடைந்தார் கருணாநிதி: இன்று மாலை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
திருவாரூர்,ஜுன்.13-  
 
திருவாரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் தெற்கு வீதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 89 -வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் புறப்பட்டு இன்று காலை 8 மணிக்கு திருவாரூர் வந்தார்.
 
அவருடன் மனைவி தயாளு அம்மாள், மத்திய மந்திரி எஸ்.எஸ். பழனி மாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, எ.வ.வேலு ஆகியோரும் வந்தனர். ரெயில் நிலையத்தில் கருணாநிதிக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன், ஏ.கே.எஸ். விஜயன் எம்.பி. உள்ளிட்டோர் தலைமையில் வரவேற்பு அளித்தனர்.
 
இதில் முன்னாள் அமைச்சர்கள் அழகு. திருநாவுக்கரசு, மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ.க் கள் ஞான சுந்தரம், ராஜமாணிக்கம், சீர்காழி பன்னீர் செல்வம், குத்தாலம் அன்பழகன் மன்னார் குடி தொகுதி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் நகர செயலாளர் சங்கர், நகர் மன்ற துணை தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தி.மு.க. பிரமுகர் தியாக பாரி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
வரவேற்பை ஏற்றுக் கொண்ட கருணாநிதி திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் திருவாரூர் அருகே  காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு தாயார் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
 
நீடாமங்கலம் ஒன்றியம் புள்ளவராயன் குடிகாடு தி.மு.க. கிளை கழகத்தின் 100 - வது மாதக் கூட்டம் நடைபெற்றது.இதில் கருணாநிதி கலந்து கொண்டார். அப்போது தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருவாரூர் வந்தார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
 
இன்று மாலை 6 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் தி.மு.க. பொதுக் கூட்டத்தில் கருணாநிதி  கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டம் முடிந்ததும் இரவு 9 மணிக்கு திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். கருணாநிதி வருகையையொட்டி திருவாரூர் விழாக் கோலம் பூண்டுள்ளது.
 
நகரம் முழுவதும் அலங்கார வளைவுகள், சாலையின் இருபுறமும் தி.மு.க. கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்திலும் வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டம் நடைபெறும் தெற்கு வீதியின் இரு புறங்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
 
பொதுக் கூட்ட வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் ஆழித் தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் தெற்கு வீதி மற்றும் மேல வீதியில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூரத்தில் இருப்பவர்கள் மேடை நிகழ்ச்சிகளை தெளிவாக காணும் வகையில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.          
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திருவாரூர்

section1

திருத்துறைப்பூண்டி அருகே ஊராட்சி பெண் கவுன்சிலர் தீக்குளிப்பு: வாலிபர் கைது

திருத்துறைப்பூண்டி, பிப்.12–திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்புண்டி அருகே உள்ள பாமணி ஊராட்சி 2–வது வார்டு உறுப்பினராக இருப்பவர் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif