புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது: 65 சதவீதம் வாக்குகள் பதிவு || pudukottai by election finished 65 percentage poll
Logo
சென்னை 26-11-2014 (புதன்கிழமை)
  • வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • சார்க் மாநாடு இன்று தொடக்கம்
  • சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து: 24 பேர் பலி
  • புதுச்சேரியில் பால்விலை ரூ.10 உயர்வு: நாளை முதல் அமல்
புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது: 65 சதவீதம் வாக்குகள் பதிவு
புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது: 65 சதவீதம் வாக்குகள் பதிவு
புதுக்கோட்டை, ஜூன். 12-
 
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் முத்துக்குமரன் மரணம் அடைந்ததால் இந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது.
 
அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான், தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சீனிவாசன் உள்பட 20 பேர் போட்டியிட்டனர். புதுக்கோட்டை தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1 லட்சத்து 94 ஆயிரத்து 980. இதில் ஆண்கள் 97 ஆயிரத்து 371 பேர். பெண்கள் எண்ணிக்கை 97 ஆயிரத்து 604. இதர வாக்காளர்கள் 5 பேர். தேர்தல் பிரசாரம் 10-ந்தேதி மாலையுடன் முடிவடைந்ததையடுத்து இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது.
 
மொத்தம் 224 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 37 வாக்குச்சாவடிகளுக்கு மத்திய அரசுப் பணியில் உள்ள நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கும் முன்பே புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் ஆண், பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஓட்டுப்பதிவு தொடங்கியதும் கூட்டம் மேலும் அதிகமானது.
 
புறநகர் பகுதியில் மந்தமாக தொடங்கிய வாக்குப் பதிவு 9 மணிக்கு மேல் விறு, விறுப்படைந்தது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. விறுவிறுப்பாக நடந்த ஓட்டுப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் 65 சதவீதம் வாக்குப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து, வரும் 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்றே வெற்றி பெற்றவர் யார் என்ற முடிவும் அறிவிக்கப்பட்டு விடும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சர்ச்சைக்குரிய உயர் கல்வி மசோதா வாபஸ்

கடந்த 2011-ம் ஆண்டு டெல்லி மேல்-சபையில், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மசோதாவை அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை ....»