ஐ.சி.சி. கிரிக்கெட் தர வரிசை: ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு 3 வது இடம் || icc cricket rating india third place
Logo
சென்னை 25-11-2015 (புதன்கிழமை)
ஐ.சி.சி. கிரிக்கெட் தர வரிசை: ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு 3-வது இடம்
ஐ.சி.சி. கிரிக்கெட் தர வரிசை: ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு 3-வது இடம்
துபாய், ஜூன்.12-
 
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி 123 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்க அணி 118 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், இந்திய அணி 117 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளது.
 
இங்கிலாந்து அணி நான்காமிடத்திலும், இலங்கை அணி ஐந்தாமிடத்திலும், பாகிஸ்தான் அணி ஆறாம் இடத்திலும், நியூசிலாந்து ஏழாம் இடத்திலும் உள்ளது. டெஸ்ட் தொடருக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடிய டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.
 
இதனால் டெஸ்ட் தர வரிசையில் இங்கிலாந்து அணி 117 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. தென் ஆப்பிரிக்க அணி 116 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 112 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்திய அணி 111 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி 108 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும், 99 புள்ளிகளுடன் இலங்கை அணி ஆறாம் இடத்திலும் உள்ளது.
 
ஏழாம் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், எட்டாம் இடத்தில் நியூசிலாந்து அணியும், ஒன்பதாம் இடத்தில் வங்கதேச அணியும் உள்ளன. சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இங்கிலாந்து முதல் இடத்தையும், தென் ஆப்பிரிக்கா இரண்டாமிடத்தையும், இலங்கை அணி மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளது. இந்திய அணி ஏழாம் இடம் பிடித்துள்ளது. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி முன்னிலை பெறுமா? கவுகாத்தியுடன் இன்று மோதல்

கோவா, நவ. 25–ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து பேட்டியின் 46–வது லீக் ....»