பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் தீ: 4 வது நாளாக புகையில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் || waste godown fire in pallikkaranai 4th day public people sad
Logo
சென்னை 01-02-2015 (ஞாயிற்றுக்கிழமை)
  • முத்தரப்பு கிரிக்கெட் : இங்கிலாந்து 32 ஓவரில் 142/8
  • ஆஸ்திரேலிய ஓபன்: முதல் செட்டை கைப்பற்றினார் ஜோகோவிச்
  • பிரதமர் மோடி மே மாதம் சீனா பயணம்
  • விமான பெட்ரோல் விலையில் 11.3 சதவீதம் சரிவு: டீசலை விட குறைந்த விலைக்கு விற்பனை
பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் தீ: 4-வது நாளாக புகையில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்
பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் தீ: 4-வது நாளாக புகையில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்
வேளச்சேரி, ஜூன்.12-
 
வேளச்சேரி- மேடவாக்கம் மெயின்ரோட்டில் பள்ளிக்கரணையில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. கடந்த ஆண்டுதான் இந்தபகுதி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அதற்கு முன்பு ஆலந்தூர் நகராட்சி பகுதியின் குப்பைகள் அனைத்தும் இங்கு கொட்டப்பட்டன.
 
சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு இங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. ஆண்டு கணக்கில் சேமிக்கப்பட்ட பல ஆயிரம் டன் குப்பை மலைபோல் குவிந்துள்ளது.
 
இந்த குப்பை கிடங்கில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விஷமிகள் தீவைத்தனர். தீயை அணைக்க இன்று 4-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். 2 தீயணைப்பு வண்டிகள் இரவு- பகலாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறது. 5 மாநகராட்சி லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் தீயை அணைக்க சகதிகளை தோண்டி அதன் மீது போட்டு வருகிறார்கள்.
 
முதலில் மிக அதிகமான புகை வெளியேறியதால் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பொது மக்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
 
தாம்பரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கைவேலி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம் வழியாக திருப்பி விடப்பட்டன. நேற்று முதல் புகை ஓரளவு குறைந்ததால் வாகன போக்குவரத்து தொடங்கியது. ஆனால் அதிக அளவில் புகை வெளியேறுவதால் முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகைமூட்டம் உள்ளது. வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக செல்கிறார்கள்.
 
80 சதவீதம் தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், அடியில் இருந்து தீ கங்குகள் குமுறி புகை வெளியேறுவதாகவும் முற்றிலும் அணைக்கப்பட்டு விடும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
தீ அணைக்கும் பணியை கே.பி.கந்தன் எம்.எல்.ஏ. மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். காற்றில் கலந்துள்ள மாசு அளவை கணக்கிட்டு வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

கழிவுநீர் தொட்டி இடிந்து பலியான 10 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்: கருணாநிதி

சென்னை, பிப். 1–தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–ராணிப்பேட்டை அருகே “சிப்காட்” வளாகத்தில், ....»