கோடம்பாக்கத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் 3 இலங்கை தமிழர்கள் கைது || fake passport held in 3 people arrested in Kodambaakkam
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
கோடம்பாக்கத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் 3 இலங்கை தமிழர்கள் கைது
கோடம்பாக்கத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் 3 இலங்கை தமிழர்கள் கைது
சென்னை, ஜூன். 12-
 
கோடம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் தங்கும் விடுதி ஒன்றில் போலி பாஸ்போர்ட்டுகளுடன் சிலர் தங்கி இருப்பதாக கமிஷனர் திரிபாதிக்கு தகவல் கிடைத்தது.
 
இதை தொடர்ந்து தென் சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஷ்வரன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அந்த விடுதியில் புகுந்து சோதனை நடத்தினர்.
 
அப்போது இலங்கையைச் சேர்ந்த ரெபிஜினஷ்,  தர்மசீலன், பாலா ஆகியோர் தங்கி இருந்தனர். இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள். இவர்களிடம் விசாரித்தபோது போலி பாஸ்போர்ட்டில் 3 பேரும் பிரான்சு செல்ல திட்டமிட்டது தெரிய வந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
 
மேலும் இவர்களுக்கு பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த புரோக்கர்கள் பிரபாகரன், சீனிவாசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

திருமங்கலம் அருகே பஸ்–லாரி மோதல்: சாவு எண்ணிக்கை 16 ஆக உயர்வு

பேரையூர், பிப். 7–திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில், ராஜபாளையம் வழியாக குமுளிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif