காணாமல் போன என்ஜினீயரிங் மாணவர் கடத்தி படுகொலை: 5 பேர் கைது || missing engg studetn killed 5 person arrest
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
காணாமல் போன என்ஜினீயரிங் மாணவர் கடத்தி படுகொலை: 5 பேர் கைது
காணாமல் போன என்ஜினீயரிங் மாணவர் கடத்தி படுகொலை: 5 பேர் கைது
திருக்கழுக்குன்றம், ஜூன்.12-
 
செய்யூர் அடுத்த விளம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் சத்தியநாதன் (வயது22). இவர் கல்பாக்கத்தில் தங்கியிருந்து கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த மே மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த சத்தியநாதன் திடீரென மாயமானார். இது குறித்து சூணாம்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
 
விசாணையில் சத்திய நாதனுக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் கோவில் விழா தொடர்பாக முன்விரோதம் இருந்தது தெரிந்தது. இது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சத்தியநாதன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அக்கிராமத்தை சேர்ந்த முருகன், மாதவன், விஜயகுமார், சரவணன், தங்கராஜ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
போலீசாரிடம் முருகன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
 
அம்மன் கோவில் திருவிழா, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எனக்கும் சத்தியநாதனுக்கும் தகராறு இருந்தது. மே 11-ந்தேதி இரவு சத்தியநாதன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். இதை பார்த்த நான் நண்பர்களுடன் சேர்ந்து சத்தியநாதனை காரில் கடத்தினோம். அவரை உருட்டுக்கட்டையால் தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்தோம்.
 
பிணத்தை விளம்பூர் கிராமத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் புதைத்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து சத்தியநாதன் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. அவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கொலையாளிகள் அடையாளம் காட்டினார்கள். போலீசார் முன்னிலையில் இன்று காலை சத்தியாநான் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அங்கேயே பிரேத பரிசோதனையும் நடந்தது. மாயமான என்ஜினீயரிங் மாணவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif