நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் கர்நாடக போலீசார் அதிரடி சோதனை || nithyanantha mutt karnataka police raid
Logo
சென்னை 05-03-2015 (வியாழக்கிழமை)
நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் கர்நாடக போலீசார் அதிரடி சோதனை
நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் கர்நாடக போலீசார் அதிரடி சோதனை
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே பிடதியில் நித்யானந்தாவின் தியான பீடம் உள்ளது. நாடெங்கும் இந்த பீடத்துக்கு கிளைகள் உள்ளது. அதன் மூலம் தியான நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நித்யானந்தா சமீபத்தில் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பு ஏற்றார்.

இந்நிலையில் நித்யானந்தாவின் பெண் சீடர்களில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த ஆர்த்திராவ், கன்னட டி.வி. சானலுக்கு அளித்த பேட்டியில், நித்யானந்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மதுரையில் இருந்து பெங்களூர் விரைந்த நித்யானந்தா, கடந்த 7-ந்தேதி தன் மீதான பாலியல் புகாருக்கு பதில் அளிக்க நிருபர்கள் கூட்டத்தை கூட்டினார். நிருபர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் நித்யானந்தா சீடர்களுக்கும், நிருபர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து கன்னட நிருபர்களுக்கு ஆதரவாக பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. நித்யானந்தாவின் பீடங்கள் தாக்கப்பட்டன. நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைத்து அதை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இதற்கு பணிந்த கர்நாடக முதல்-மந்திரி சதானந்த கவுடா, பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நித்யானந்தா கைது செய்யப்படுவார் என்றும் சதானந்தகவுடா அறிவித்தார்.

கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நித்யானந்தா தலைமறைவாகி விட்டார். பிடதி ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது.

இந்நிலையில் நித்யானந்தா ஆசிரமத்தில் சோதனை நடத்துவதற்கான அரசு உத்தரவு இன்று ராம்நகர் மாவட்ட கலெக்டருக்கு கிடைத்தது. இதனை அவர் போலீஸ் சூப்பிரண்டு அனுபவ் அகர்வாலுக்கு தெரிவித்தார்.

தனிப்படை போலீசார் பீடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இன்று சோதனையிடுகிறார்கள்.என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை கணக்கிடுவதுடன் அங்கிருந்த ஆவணங்களையும் ஆய்வு செய்கிறார்கள்.

நித்யானந்தா ஆசிரமத்தில் வெளிநாட்டு பக்தர்கள் உள்பட சுமார் 150 பேர் தங்கி இருந்தனர். நித்யானந்தாவை கைது செய்ய அரசு உத்தரவிட்டதையடுத்து பலர் ஆசிரமத்தை காலி செய்ய தொடங்கினார்கள். சீடர்கள் பலர் தங்களது சீருடைகளை களைந்து சாதாரண உடையில் வெளியேறினார்கள்.

பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் அவர்களது உடமைகளை கடுமையாக சோதனையிட்ட பின்னரே வெளியேற அனுமதித்தனர். இன்று காலை வரை 70 சதவீதம் பக்தர்கள் வெளியேறி விட்டனர். வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர்கள் மட்டும் ஆசிரமத்தில் தங்கி உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.

சோதனை குறித்து கலெக்டர் கூறும்போது, ஆசிரமத்தில் 48 மணி நேரம் சோதனை நடத்தப்படும். அங்குள்ள ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அதன் பிறகே சீல் வைப்பது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

யூ டியூப் மற்றும் வலைதளத்தில் இருந்து இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை நீக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லியில் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட நிர்பயா என்ற இளம்பெண் குறித்த 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை யூ டியூப் ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif