மது விருந்தின்போது 8 வயது மகளை தவறவிட்ட இங்கிலாந்து பிரதமர் கேமரூன் || uk prime minister cameron missed his 8 years old child
Logo
சென்னை 20-12-2014 (சனிக்கிழமை)
  • அமித்ஷா இன்று சென்னை வருகை
  • புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரமத்தை அரசு கையகப்படுத்த வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம்
  • 2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா 143/7
மது விருந்தின்போது 8 வயது மகளை தவறவிட்ட இங்கிலாந்து பிரதமர் கேமரூன்
மது விருந்தின்போது 8 வயது மகளை தவறவிட்ட இங்கிலாந்து பிரதமர் கேமரூன்
லண்டன், ஜூன்.12-
 
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன். இவரது மனைவி சமந்தா. இவர்களுக்கு நான்சி (8), ஆர்தர் (6) மற்றும் புளோரன்ஸ் (22 மாதம்) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
 
இங்கிலாந்தில் 200 ஆண்டுகளுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் இளமையான பிரதமர் என்ற பெருமையை கேமரூன் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்கிங்ஹாம் சியரில் காஸ்டனில் உள்ள பிளப் இன் என்ற ஓட்டலில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்டார்.
 
அதில், பங்கேற்க மனைவி சமந்தா மற்றும் 3 குழந்தைகளையும் உடன் அழைத்து சென்றார். விருந்து முடிந்ததும் மனைவி மற்றும் குழந்தைகள் ஆர்தர், புளோரன்சுடன் காரில் பிரதமர் இல்லம் உள்ள டவுனிங் தெருவுக்கு புறப்பட்டார்.
 
காரில் தாயார் சமந்தாவுடன் 8 வயது மகள் நான்சி இருப்பதாக பிரதமர் கேமரூன் நினைத்தார். அதேபோன்று இவருடன் அவள் இருப்பதாக சமந்தா நினைத்தார். ஆனால் நடந்ததோ வேறு.
 
விருந்து முடிந்து திரும்பியபோது இவர்கள் இருவரும் தங்களது மகள் நான்சியை அங்கேயே தவறவிட்டு திரும்பி கொண்டிருந்தனர்.
 
இந்த நிலையில் விருந்து நடந்த ஓட்டலின் கழிவறையில் நான்சி மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தார். அவளை ஓட்டல் ஊழியர் பார்த்து விசாரித்தார். அப்போதுதான் அவளது தந்தை இங்கிலாந்து பிரதமர் கேமரூன் என தெரிய வந்தது.
 
அதைத்தொடர்ந்து பிரதமர் கேமரூனுக்கு டெலிபோன் மூலம் நான்சி குறித்த தகவல்களை தெரிவித்தார். அதன்பிறகு மீண்டும் ஓட்டலுக்கு திரும்பி சென்று நான்சியை அழைத்து வந்தனர்.
 
இந்த செய்தி இங்கிலாந்து பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தங்களது குழந்தையை தவற விட்டதற்காக பாதுகாப்பு அதிகாரி மீது கேமரூன் நடவடிக்கை எடுக்கவில்லை.
 
ஏனெனில் குழந்தைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை. அந்த கடமையில் இருந்து தானும், மனைவி சமந்தாவும் தவறி விட்டதாக அவர் கருதினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2-வது இடம்

சிறந்த உலக தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. குறைந்த வித்தியாசத்தில் சீன அதிபர் ....»