புதுக்கோட்டை தொகுதியில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு || polling start in pudukottai bye election
Logo
சென்னை 04-09-2015 (வெள்ளிக்கிழமை)
புதுக்கோட்டை தொகுதியில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
புதுக்கோட்டை தொகுதியில்  விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
புதுக்கோட்டை, ஜூன். 12-
 
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் முத்துக்குமரன் மரணம் அடைந்ததால் இந்த தொகுதிக்கு இன்று இடைத் தேர்தல் நடக்கிறது.
 
அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான், தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சீனிவாசன் உள்பட 20 பேர் போட்டியிடுகின்றனர். புதுக்கோட்டை தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1 லட்சத்து 94 ஆயிரத்து 980. இதில் ஆண்கள் 97 ஆயிரத்து 371 பேர். பெண்கள் எண்ணிக்கை 97 ஆயிரத்து 604. இதர வாக்காளர்கள் 5 பேர்.
தேர்தல் பிரசாரம் 10-ந் தேதி மாலையுடன் முடிந்தது. மற்ற தொகுதியில் இருந்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
 
இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மொத்தம் 224 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளும் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் பதட்டமான 37 வாக்குச்சாவடிகளுக்கு மத்திய அரசுப் பணியில் உள்ள நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
வாக்குச்சாவடி அலுவலர்கள் நேற்று பிற்பகலிலேயே அந்தந்த மையங்களுக்கு சென்றனர். ஒரு சாவடிக்கு 2 மின்னணு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, அடையாள 'மை' உள்ளிட்ட 108 பொருட்கள் வழங்கப்பட்டன.
 
காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கும் முன்பே புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் ஆண், பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஓட்டுப்பதிவு தொடங்கியதும் கூட்டம் மேலும் அதிகமானது. புறநகர் பகுதியில் மந்தமாக தொடங்கிய வாக்குப் பதிவு 9 மணிக்கு மேல் விறு, விறுப்படைந்தது.
 
முதன் முதலாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டார்கள்.   அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் காலை 8 மணிக்கு தனது வாக்கினை பதிவு செய்தார்.
 
தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர்உசேன் காலையிலேயே பிரகதாம்பாள் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் ஓட்டு போட்டார்.அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. வாக்குப்பதிவு நடவடிக்கைகளை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
 
எஸ்.எம்.எஸ். மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரத்தை தெரிவிக்கவும் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி ஓட்டுப் பதிவு நிலவரம் மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
 
வாக்குச் சாவடிகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இதில் எல்லை பாதுகாப்பு படையினர் 550 பேர், 452 ஊர்க்காவல் படையினர், உள்ளூர் போலீசார் 1,489 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 330 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 821 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சாவடிகளில் நேற்று முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
திருச்சி மண்டல ஐ.ஜி. அலெக்சாண்டர் மோகன் மேற்பார்வையில் டி.ஐ.ஜி. அமல்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் தலைமையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.
 
கலவரத்தை தூண்டினால் துப்பாக்கி சூடு நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு பூட்டி சீல் வைக்கப்படும். வருகிற 15-ந்தேதி காலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ராஜஸ்தானில் 4.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

ராஜஸ்தானின் பல பகுதிகளில் வியாழன் இரவு லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. வானிலை துறை தெரிவித்துள்ள தகவல் ....»