நாகர்கோவில் அருகே கார் மோட்டார் சைக்கிள் மோதல்: 4 பேர் பரிதாப சாவு || accident near nagercoil 4 dead
Logo
சென்னை 04-03-2015 (புதன்கிழமை)
நாகர்கோவில் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: 4 பேர் பரிதாப சாவு
நாகர்கோவில் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: 4 பேர் பரிதாப சாவு
பூதப்பாண்டி, ஜுன்.12-
 
நாகர்கோவில் அருகேயுள்ள பூதப்பாண்டி துவரங்காட்டில் இருந்து இறச்சகுளம் நோக்கி நேற்று இரவு ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இந்த காரை இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 27) என்பவர் ஓட்டி வந்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (19), சசி (32), கண்ணன் (30) ஆகியோர் பயணம் செய்தனர்.
 
வரகுணமங்கலம் பகுதியில் வந்த போது ஒரு மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் நிலைதடுமாறிய கார் ரோட்டோரத்தில் இருந்த குளத்திற்குள் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த அரி சம்பவ இடத்தில் பலியானார்.
 
குளத்திற்குள் கவிழ்ந்த காரை அப்புறப்படுத்திவிட்டு அதற்கு அடியில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் கார் டிரைவர் சுதாகர், அதில் பயணம் செய்த வெங்கடேஷ், சசி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

கல்லூரி பேராசிரியரை இடமாற்றம் செய்தது ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு

கடலூரில் உள்ள கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் கணிதம் பிரிவு தலைவராக பணியாற்றுபவர் பேராசிரியர் சாந்தி. இந்த ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif