நித்யானந்தா தியான பீடத்தை அரசு கையகப்படுத்த முடியாது: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பேட்டி || Nithyanantha government madurai adheenam interview
Logo
சென்னை 02-04-2015 (வியாழக்கிழமை)
நித்யானந்தா தியான பீடத்தை அரசு கையகப்படுத்த முடியாது: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பேட்டி
நித்யானந்தா தியான பீடத்தை அரசு கையகப்படுத்த முடியாது: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பேட்டி
மதுரை, ஜூன் 11-
 
மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது வன்முறை ஏற்பட்டது.
 
இதுதொடர்பாக கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே நித்யானந்தாவின் தியான பீடத்தை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரின் அறிக்கை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை மூத்த ஆதீனம் அருணகிரிநாதர் மதுரை திரும்பினார். இன்று காலை ‘மாலை மலர்’ நிருபரிடம் அவர் கூறியதாவது:-  
 
பிடதி ஆசிரமத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் நித்யானந்தாவுடன் நானும் அமர்ந்து இருந்தேன். அப்போது செய்தியாளர் போர்வையில் ஒரு நபர் ஊடுருவி நித்யானந்தாவை கோபப்படுத்தும் வகையில் கேள்விகளை எழுப்பினார்.
 
அப்போது தன்னிடம் ஒரு சம்மன் இருப்பதாக கூறிய அந்த நபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நேரத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சினையை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
 
நித்யானந்தா பெங்களூரில்தான் இருக்கிறார். அவர் தலைமறைவாகவில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை.   நித்யானந்தாவின் தியான பீடங்கள் பெங்களூர் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இருக்கின்றன. இந்த தியான பீடங்கள் அவரது தனிப்பட்ட சொத்தாகும். அவரது உழைப்பால் ஆன்மிக பணியால் உருவாக்கப்பட்டது. இதில் யாரும் தலையிட முடியாது.
 
கர்நாடக அரசு நித்யானந்தாவின் தியான பீடத்தை கைப்பற்றபோவதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அரசு இதில் தலையிட முடியாது. தியான பீட சொத்துக்களை அரசு கையகப்படுத்த எந்த சட்டத்திலும் இடம் இல்லை.
 
நித்யானந்தா எப்போதும் போல் தைரியமாகவும், திடமாகவும் இருக்கிறார். எத்தனை போராட்டங்கள், எதிர்ப்புகள் வந்தாலும் எங்களது பக்குவமும், பொறுமையும் மென்மேலும் வளர்ந்து கொண்டு இருக்கிறது.   ஒரு தகுதியான நபரைதான் மதுரை இளைய ஆதீனமாக நியமித்து இருக்கிறேன். அவர் நல்ல முறையில் சிறப்பாக ஆன்மிக பணியை நிறைவேற்றி வருகிறார்.
 
எனவே மதுரை ஆதீன நியமனத்தில் எந்த மாற்றமும் இருக்காது. எங்களை எதிர்ப்பவர்கள் விரைவில் ஆதரவாளராக மாறுவார்கள். பெங்களூரில் இருக்கும் நித்யானந்தா இன்று மாலை அல்லது நாளைக்குள் மதுரை திரும்புவார்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மதுரை

section1

மேலூர் பகுதியில் லாரிகளில் கிரானைட் கற்கள் கடத்தப்படுகிறதா?: சகாயம் குழுவினர் அதிரடி சோதனை

மேலூர், ஏப். 2– மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முறைகேடாக ....»