Logo
சென்னை 24-04-2014 (வியாழக்கிழமை)
பாகிஸ்தானில் மோதல்: 10 தீவிரவாதிகள் பலி
இஸ்லாமாபாத், ஜூன்.10-
 
பாகிஸ்தானின் தெற்கு வசீரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் உள்ள வானா நகர ராணுவ சோதனைச்சாவடி மீது தீவிரவாதிகள் இன்று காலை திடீர்த் தாக்குதல் நடத்தினர்.உடனே, சுதாரித்துக் கொண்ட ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.
 
இரு தரப்பினருக்கும் இடையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன. இந்த மோதலில் ஒரு ராணுவ வீரரும், 10 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரரும், 8 தீவிரவாதிகளும் காயமடைந்தனர்.
 
இது குறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில், சம்பவம் நடந்தபோது அப்பகுதியை விட்டு வெளியேறும்படி ராணுவம் தங்களுக்கு உத்தரவிட்டதாகத் தெரிவித்தார்.இத்தகவலை பாகிஸ்தான் வானொலியின் இணையதளம் வெளியிட்டுள்ளது.
 
தெற்கு வசீரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் தலிபான் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2009-ல் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

நைரோபி காவல்நிலையம் அருகே கார் வெடிகுண்டுத் தாக்குதல்: 4 பேர் பலி

கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள காவல்நிலையத்தில் நேற்று இரவு நடைபெற்ற கார் வெடிகுண்டுத் தாக்குதலில் இரண்டு ....»