பெரம்பலூர் அருகே மருமகளை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட மாமியார்? || perambalur bride groom murder hanged daughter in law
Logo
சென்னை 30-03-2015 (திங்கட்கிழமை)
  • ஜம்மு காஷ்மீரில் தொடர் மழை : ஸ்ரீநகர் உட்பட 7 மாவட்டங்களி்ல் வெள்ள அபாய எச்சரிக்கை
  • சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்தில் சேருவதற்கான கெடு நாளையுடன் முடிகிறது
  • ஊதிய ஒப்பந்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று 4-வது கட்ட பேச்சுவார்த்தை
  • நாளை நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயருகிறது
  • பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவு
பெரம்பலூர் அருகே மருமகளை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட மாமியார்?
பெரம்பலூர் அருகே மருமகளை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட மாமியார்?
குன்னம், ஜூன். 10-  
 
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மருவத்தூர் போலீஸ் சரகம் வரகுபாடியை சேர்ந்தவர் செந்தில் (வயது 32), லாரி அதிபர். அவரது மனைவி ஜெயப்ரியா (25). இவர்களுக்கு கிருத்திகா (4), முரளிதரன் (1 1/2) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
 
இன்று காலை ஜெயப்ரியா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்த அவரது மாமியார் லட்சுமி அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
 
ஆனால் போலீசார் வருவதற்கு முன்பே ஜெயப்ரியாவின் உடல் தூக்கில் இருந்து கீழே இறக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜெயப்ரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
இதுகுறித்து மாமியார் லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் உயிருக்கு போராடிய தனது மருமகளை தூக்கில் இருந்து காப்பாற்ற உடலை இறக்கியதாக தெரிவித்தார்.
 
ஆனால் லட்சுமி கூறிய முன்னுக்குப்பின் முரணான பதில் போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பி உள்ளது.   தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதாவது, லாரி அதிபர் செந்திலுக்கும், இன்னொரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்து உள்ளது.
 
இதனை ஜெயப்ரியா தட்டிகேட்டு உள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் மருமகளை மாமியாரே கொன்று தூக்கில் தொங்கவிட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
 
இதுதொடர்பாக ஜெயப்ரியாவின் மாமியார் லட்சுமியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - பெரம்பலூர்