காதலி வீட்டுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பிய காதலன்: குண்டு வெடித்து பெண் படுகாயம் || young man bomb parcel send to girl lady injury
Logo
சென்னை 25-10-2014 (சனிக்கிழமை)
காதலி வீட்டுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பிய காதலன்: குண்டு வெடித்து பெண் படுகாயம்
காதலி வீட்டுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பிய காதலன்: குண்டு வெடித்து பெண் படுகாயம்
ராஜ்கோட், ஜூன்.10-

குஜராத் மாநிலம் ஜூனகாத் மாவட்டம் அம்பாவத் கிராமத்தைச் சேர்ந்தவர் குலாபீன் வகாஷியா (வயத 45). இவரது வீட்டுக்கு தபால் அலுவலகத்தில் இருந்து பார்சல் ஒன்று வந்தது. அந்த பார்சலை குலா பீன் திறந்தபோது குண்டு வெடித்தது. பார்சலில் இருந்த குண்டு வெடித்ததால் அவர் படுகாயம் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பார்சலில் அனுப்பப்பட்ட டெட்டனனேட்டர் மற்றும் வயர்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. வெடிகுண்டு பார்சலை அதே மாவட்டம் ஜுடிவால்டா கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அனுப்பி இருந்தது தெரிய வந்தது.

குலாபீனின் மருமகளுக்கும் அந்த வாலிபருக்கும் காதல் இருந்தது. இதற்கு பெற்றோரும் பச்சைக்கொடி காட்டி திருமணத்துக்கு சம்மதித்தனர். இதற்கிடையே விபத்து ஒன்றில் அந்த வாலிபர் தனது 2 கால்களை இழந்தார். இதனால் திருமண நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த வாலிபர் ஆத்திரம் அடைந்து காதலி வீட்டுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் அந்த வாலிபரை தேடிவருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு தொடருவேன்: சந்திரசேகர ராவ் எச்சரிக்கை

ஐதராபாத், அக். 25–தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீசைலம் அணையில் மின்சார உற்பத்திக்காக அம்மாநில அரசு தண்ணீர் திறந்து ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif