குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் நீடிப்பு: 120 வீடுகள் சேதம் || kumari district sea arour houses damage
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் நீடிப்பு: 120 வீடுகள் சேதம்
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் நீடிப்பு: 120 வீடுகள் சேதம்
நாகர்கோவில்,ஜூன்.10-
 
குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மேற்கு கடற்கரை பகுதிகளில் மே மாதம் 15-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் தென்மேற்கு காற்று தீவிரம் அடையும் காலங்களாகும்.
 
இந்த காலக்கட்டத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் அலைகளின் சீற்றம் அதிகரிப்பது வழக்கமாகும். தற்போது மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வேகமாக வீசி வருகிறது. இதன் காரணமாக தேங்காய் பட்டினம், இனயம், பூத்துறை, தூத்தூர், மார்த்தாண்டம் துறை, முள்ளூர் துறை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் உள்ள கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.
 
கடலில் அலைகள் 10 முதல் 15 அடி உயரத்திற்கு எழுந்து கரையை தாக்குகின்றன. இதனால் இந்த கிராமங்களில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஊருக்குள் கடல் நீர் புகுந்து வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
 
பூத்துறை காருண்யாபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அங்குள்ள மக்கள் வீடுகளை காலி செய்து சமத்துவபுரம் வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
 
பூத்துறையில் மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகிறார்கள். கடலரிப்பினால் இருவிழத்தன்துறை, பூத்துறை உள்ளிட்ட கிராமங்களில் கடற்கரை சாலையில் 5 முதல் 6 அடி நீளத்திற்கு அரிப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடல் சீற்றம் குறித்து பூத்துறையைச் சேர்ந்த அமலா கூறியதாவது:-
 
வழக்கமாக ஜூன் 15-ந் தேதி பிறகுதான் சீற்றம் அதிகமாக காணப்படும். ஆனால் இந்த ஆண்டு இப்போதே சீற்றம் அதிகமாக உள்ளது. இனி காற்று அதிகமாக வீசும் பட்சத்தில் சீற்றம் ஏற்பட்டு பாதிப்பு அதிகம் ஏற்படும். எங்கள் பகுதியில் 120 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - கன்னியாகுமரி

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif